இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நெல் குவிண்டாலுக்கு ரூ.1,500 வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

நெல்லுக்கு கொள்முதல் விலையாக அரசு குவிண்டாலுக்கு ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்க மாவட்டச் செயலாளர் மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கை:தற்போது பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. ஆனால் 17 சதவீதம் ஈரப்பதம் கொண்ட நெல்லை மட்டுமே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் தனியாரிடம் நெல் விற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

எனவே ஈரப்பதத்தின் அளவை 17 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் உயர்த்த வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நெல் தூற்றப்படும் போது அளவுக்கு அதிகமான நெல் கதிர்கள் வீணடிக்கப்படுகின்றன. மேலும் மின்சாரம் இருக்கும் சமயங்களில் மட்டுமே நெல் தூற்றப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உடனே பணம் வழங்கப்படுவது இல்லை. ஆனால் தனியார் வியாபாரிகள் உடன் பணம் கொடுத்து நெல்லை கொள்முதல் செய்கின்றனர். இதனால் தான் அரசு தரப்பில் நெல் கொள்முதல் என்பது குறிப்பிட்ட இலக்கை எட்ட முடியாமல் போகிறது. நெல்லுக்கு கொள்முதல் விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ஆயிரத்து 500 ரூபாய் வீதம் அரசு வழங்கினால் மட்டுமே விவசாயிகள் நெல் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

குறிச்சொற்கள்: , , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment