உர விற்பனையில் முறைகேடு 4 கடைகளின் உரிமம் ரத்து
4:44 PM உர விற்பனையில் முறைகேடு 4 கடைகளின் உரிமம் ரத்து, சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டாரத்தில் உள்ள உர விற்பனை கடைகளில் கடந்த நவம்பரில் விவசாயத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சேத்தூர் மற்றும் தேவதானம் பகுதியில் உள்ள நான்கு கடைகளில் கலப்பு உரங்கள் என குறிப்பிடாமல், அதை காம்ப்ளக்ஸ் உரம் எனக் குறிப்பிட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், விற்பனை பதிவேட்டில் கலப்பு உரத்திற்கான எண் குறிப்பிடப்படாமல் விற்பனை செய்யப்பட்டது.இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட் டது. அவர்களது பதில் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லாததால், அக்கடைகளின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட விவசாய உதவி இயக்குனர்(தரக்கட்டுப்பாடு) மணிசேகரன் உத்தரவிட்டுள்ளார். இத்தகவலை ராஜபாளையம் விவசாய உதவி இயக்குனர் தனசேகரன் தெரிவித்துள்ளார்.
குறிச்சொற்கள்: உர விற்பனையில் முறைகேடு 4 கடைகளின் உரிமம் ரத்து, சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது