புடலை விதைகள் தயாரிப்பதில் பல்லடம் விவசாயிகள் ஆர்வம்
4:38 PM சிறப்பு, செய்திகள், தலைப்பு, புடலை விதைகள் தயாரிப்பதில் பல்லடம் விவசாயிகள் ஆர்வம் 0 கருத்துரைகள் Admin
புடலங்காய் கொள்முதல் விலை சரிந்துள்ளதால், பல்லடம் பகுதியில் உள்ள விவசாயிகள், வெளிமாநிலங்களுக்கு புடலை விதை விற்பனை செய்ய, விதை தயாரிப்பில் ஆர்வம் காட்டுகின்றனர்.
பல்லடம் பகுதியில் கேத்தனூர், புள்ளியப்பம்பாளையம், வெங்கிட்டாபுரம், கரடிவாவி, செலக்கரிச்சல், பாப்பம்பட்டி, ஜல்லிப்பட்டி, கொடுவாய், பச்சார்பாளையம், மானாசிபாளையம் உட்பட பல இடங்களில் 400 ஏக்கர் பரப்பளவில் புடலங்காய் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை செய்யப்படுகிறது. இங்கு அறுவடை சய்யப்படும் புடலங்காய், திருப்பூர் மற்றும் கோவை, ஒட்டன்சத்திரம், தாராபுரம் மற்றும் கேரள பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. சாகுபடி செய்த 65 நாட்களில் இருந்து தொடர்ந்து இரண்டு மாதங்கள் புடலை பலன் கொடுக்கக்கூடியது. பல்லடம் பகுதியில் குட்டை வரி புடலை ரகம் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது, புடலங்காய் கிலோ நான்கு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் மட்டுமே வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுவதால், புடலை விவசாயி களுக்கு எதிர்பார்த்த வருவாய் கிட்டவில்லை. இதன்காரணமாக, இங்குள்ள பல புடலை விவசாயிகள் தங்களின் தோட்டங்களில் புடலை பறிப்பை பெருமளவு கவிட்டு, நன்கு பழுக்க விடத்துவங்கியுள்ளனர். நன்கு பழுத்த புடலங்காயின் விதைகளை எடுத்து, அதை தேய்த்து மேல் தோலை நீக்கி, மிதமான வெப்பத்தில் மூன்று நாட்கள் உலர வைத்தால், அவை விதையாக மாறுகிறது. விதை தயாரித்த 40 நாட்களில் இருந்து, அவற்றை சாகுபடி செய்ய பயன்படுத்தலாம்.
தரமான மூன்று கிலோ எடையுள்ள புடலையில் இருந்து 80 கிராம் முதல் 100 கிராம் வரை விதைகள் கிடைக்கின்றன. கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் குட்டை வரி புடலை விதைகள், கிலோவுக்கு 750 ரூபாயில் இருந்து 800 ரூபாய் வரை விலை கிடைப்பதால், பல்லடம் பகுதியில் உள்ள பல விவசாயிகள் வெளிமாநிலங்களுக்கு புடலை விதை தயாரித்து அனுப்புவதில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர்.

குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, புடலை விதைகள் தயாரிப்பதில் பல்லடம் விவசாயிகள் ஆர்வம்
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது