சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி; விவசாயிகள் சோகம்
4:37 PM சிறப்பு, சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி; விவசாயிகள் சோகம், செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
வெளிமாநிலங்களில் இருந்து சின்ன வெங்காயம் வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால், உள் ளூர் சின்ன வெங்காயம் கொள் முதல் விலை சரிந்து வருகிறது; பல்லடம் பகுதியில் உள்ள சின்ன வெங்காய விவசாயிகள் சோகம் அடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் கேத்தனூர், மந்திரிபாளையம், ஜல்லிப்பட்டி, குள்ளம்பாளையம், வாவிபாளை யம், மானாசிபாளையம், கணபதி பாளையம் உட்பட பல இடங் களில் 3,000 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய் யப்பட்டிருந்தது. சாகுபடி செய்து 80 நாட்கள் முடிவடைந்ததால், அறு வடை தீவிரமாக நடந்து வருகிறது.பல்லடம் பகுதி சின்ன வெங் காயம் விவசாயிகளிடம் இரு வார மாக தரமான சின்ன வெங்காயம் கிலோ 15 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். அவற்றை, திருப்பூர், திண்டுக்கல், கோவை, தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பு கின்றனர். இக்கொள்முதல் விலை கட்டுப்படியானதாக இருந்ததால் விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.சில நாட்களாக, கர்நாடகம், ஆந்திராவில் இருந்து கோவை, திருப்பூர், திண்டுக்கல் மார்க்கெட்டு களுக்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து சின்ன வெங்காயம் வரத்தால், உள்ளூர் சின்ன வெங்காயத்தின் கொள் முதல் விலை கிலோவுக்கு இரண்டு ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரை சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில், கிலோவுக்கு மூன்று ரூபாய் வரை கொள்முதல் விலை சரிவு, பல்லடம் பகுதி சின்ன வெங்காய விவசாயிகளை சோகம் அடையச் செய்துள்ளது.ஜல்லிப்பட்டியைச் சேர்ந்த சின்ன வெங்காய விவசாயி பழனிசாமி கூறியதாவது:ஒரு ஏக்கர் சின்ன வெங்காயம் சாகுபடி செய்து அறுவடை செய்ய 30 ஆயிரம் ரூபாய் வரை செலவா கிறது. நல்ல முறையில் மகசூல் கிடைத்தால், ஏக்கருக்கு ஏழு டன் சின்ன வெங்காயம் கிடைக்கும். கடந்த வாரம் வரை தரமான வெங்காயம் கிலோ 15 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, ஆந்திரா, பெங்களுரூ, மைசூர் போன்ற பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம், தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு வந்துள்ளதால் கொள்முதல் விலை கிலோவுக்கு மூன்று ரூபாய் சரிந்துள்ளது. வெங்காய அறுவடைக்கு பெண்களுக்கு 130 ரூபாய், ஆண்களுக்கு 250 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது.
கடந்தாண்டு, ஏக்கருக்கு 25 ஆயிரம் ஏற்பட்ட செலவு, இந் தாண்டு கூலி உயர்வு, விதை வெங் காய விலை உயர்வு உள்ளிட் டவை காரணமாக, ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவாகியுள்ளது. வெங்காய அறுவடைக்கு வரும் காலம், பயிர் பாதுகாப்பு, அறு வடை கூலி அதிகரிப்பை கணக் கிட்டால், வெங்காயம் சாகுபடியில் பெரிதாக வருமானம் தராது. வெங்காயத்துக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக, கிலோ 15 ரூபாய் இருந்தால் மட்டுமே கட்டுப் படியாகும். சின்ன வெங்காயம் சாகுபடியில் தொடர்ந்து ஆர்வம் காட்ட முடியும். வெளிமாநிலங் களில் இருந்து வரும் சின்ன வெங் காயம் வரத்து இன்னும் மூன்று வாரத்துக்குள் குறைந்து விடும். அதன்பின் உள்ளூர் வெங்காயத் துக்கு மீண்டும் நல்ல விலை கிடைக்கும். இவ்வாறு, விவசாயி பழனிசாமி கூறினார்.

குறிச்சொற்கள்: சிறப்பு, சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி; விவசாயிகள் சோகம், செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது