இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

வறண்ட மாவட்டத்தை பசுமையாக்க புதிய திட்டம் சீமைக்கருவேல் மரங்களை அடியோடு ஒழிக்க முடிவு

விருதுநகர் மாவட்டம் வறண்ட பூமியாக காணப்படுகிறது. இங்கு மழை வளம் குறைந்ததால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை பசுமையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் புதிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.பசுமையாக்கும் திட்டம்: விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளான ஸ்ரீவி., ராஜபாளையம் போன்ற பகுதிகள் ஒரளவு வறட்சியில்லாமல் உள்ளது. மற்ற பகுதிகளில் வறண்ட தட்ப, வெப்ப நிலை உள்ளதால் இந்த பகுதிகளை பசுமையாக்கும் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதன் படி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி, மெட்ரிக்., பள்ளிகளில் உள்ள மாணவர்கள் மூலமாக வீட்டுக்கு, வீடு மரம் வளர்க்கும் திட்டமாகும். மரங்கள் இல்லாத நிலையால் தான் மழை வளம் குறைந்து வருகிறது. வீட்டுக்கு வீடு மரம் வளர்க்க துவங்கினால் மரங்கள் அதிகரித்து மழை அதிகரிக்கும்.

கணக்கெடுப்பு: அனைத்து பள்ளி, கல்லூரி நிர்வாகங்களையும் கணக் கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் மாணவ, மாணவிகளின் வீட்டில் மரம் வளர்க்கும் அளவிற்கு இடம் உள்ளதா? அப்படி இருந்தால் எத்தனை மரங்கள் நடவு செய்ய முடியும் என கணக்கெடுத்து வழங்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு படி மாவட்டத்தில் எத்தனை மரங்கள் வளர்க்க முடியும் என அறிந்து கொண்டு மரங்களை வளர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.10 லட்சம் மரங்கள்: மாவட்டத்தில் மொத்த தேவை அறிந்த பின்னர் நீர் வளம் காக்கும் தென்னை, தேக்கு, சிறு நெல்லி ஆகிய மரங்களை நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது வரும் ஜூன் 5 ம் சுற்றுச்சூழல் தினத்திற்குள் 10 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப் பட்டுள்ளது. மசூதிகள், கோயில்கள், கிறிஸ்த ஆலயங்களிலும் மரங்களை நடவு செய்யலாம். பள்ளி, கல்லூரி மாணவர்களை தூண்ட நிர்வாகங்கள் முன் வர வேண்டும். மாணவர்கள் மரங்களை தங்கள் வீடுகளில் வளர்க்கும் இந்த திட்டத்தின் மூலம் வரும் ஐந்தாண்டுகளில் மரங்கள் வளர்ந்த பின்பு விருதுநகர் மாவட்டம் மழை வளம் பெறும்.சீமைகருவேல் மரங்கள் அகற்றம்: நிலத்தடி நீரை பாதிக்கும் சீமைக்கருவேல் மரங்களை மாவட்டத்தில் அடியோடு ஒழிக்கும் பொருட்டு பள்ளி, கல்லூரிகளில் உள்ள தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், சாரணர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் சீமை கருவேல் மரங்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வீணாக கிடக்கும் தரிசு நிலங்களில் கருவேல் மரங்களை அகற்றி பலன் தரும் மரங்களை வளர்க்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான திட்டத்தை வரும் 11ம் தேதி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் துவக்கி வைக்கிறார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment