இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கொண்டை கடலைக்கு செயற்கை விலை வீழ்ச்சி : அரசு கொள்முதல் செய்ய கோரிக்கை

கொண்டைக்கடலைக்கு செயற்கையாக விலை வீழ்ச்சி ஏற்படுவதை தடுக்க அரசே நேரடி கொள்முதலில் ஈடுபட வேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர். உடுமலை பகுதியில் கொண்டைக்கடலை பல ஆயிரம் ஏக்கரில் நவ., மாத இறுதியில் மானாவாரியாக பயிரிடப்பட்டு பிப்., மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது. குறைந்த பனிப்பொழிவு மற்றும் இதர காரணங்களால் இந்தாண்டு கொண்டைக்கடலை விளைச்சல் பாதிக்கப்பட்டது. ஒரு வாரமாக அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது. அறுவடை துவங்கும் முன் வெளி சந்தையில் 100 கிலோ மூட்டைக்கு 3,100 ரூபாய் வரை விலை கிடைத்து வந்தது.விவசாயிகள் விளைநிலங்களிலிருந்து கடலையை சந்தைக்கு எடுத்து வரும் முன் விலை சரிய துவங்கியது. இரண்டு நாட்களில் மூட்டைக்கு 500 ரூபாய் வரை குறைந்து தற்போது 2,600 ரூபாய் வரை விலை உள்ளது.சில்லரை விற்பனையில்
கடலைக்கு நல்ல விலை இருந்தாலும், விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்படுகிறது.ஆந்திராவில் இருந்து வரத்து அதிகரித்துள்ளது உட்பட பல்வேறு காரணங்களை கூறி கொள்முதல் விலையை இடைதரகர்கள் குறுகிய நாட்களில் குறைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
விவசாயிகள் மற்றும் தானியங்களை சில்லரை விற்பனையில் வாங்கும் மக்கள் இருதரப்பினரும் பாதிக்கப்படாமல் இருக்க கொண்டைக்கடலையை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
அரசு பள்ளிகளில் வாரத்திற்கு இரண்டு முறை குழந்தைகளுக்கு கொண்டைக்கடலை வழங்கப்படுகிறது. பள்ளிகளுக்கு தேவையான கடலையை அரசு பெரும்பாலும் வெளிச்சந்தையில் கொள்முதல் செய்கிறது. விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு கடலையை வாங்கி, இருப்பு வைத்து அரசுக்கு அதிக விலைக்கு விற்று ஒரு சிலர் லாபம் பார்க்கின்றனர். இதனால், அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது. ஆண்டுதோறும் விவசாயிகள் நஷ்டத்தை சந்திப்பதை தடுக்க அரசு, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் "நேபட்' மூலம் கொண்டைக்கடலையை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கொண்டைக்கடலை தொழிலாளர் தட்டுப்பாடு மற்றும் மருந்துகள் விலையேற்றம் காரணமாக சாகுபடி செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. விலை வீழ்ச்சியால் ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படும். மக்காச்சோள அறுவடையும் தற்போது நடப்பதால், கடலையை இருப்பு வைக்க கிடங்குகள் கிடைக்காத நிலை உள்ளது. இதனால், கிராமங்களுக்கு நேரடியாக வரும் வியாபாரிகளிடம் கிடைத்த விலைக்கு விற்பனை செய்து வருகிறோம்.ஆண்டில் ஒரு முறை மட்டுமே சாகுபடி செய்யப்படும் கொண்டைக்கடலைக்கு விலை வீழ்ச்சி ஏற்படாமல் இருக்க அரசு நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment