
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நான், மீண்டும் பிழைப்பேனா என்று நினைத்தேன். ஆனால் நான் மரணத்தை வென்றுவிட்டேன் என்றும் மெக்ஸிகோ நாட்டின் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிடல் காஸ்ட்ரோ கூறியுள்ளார்.
பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியது: உடல் நலம் பாதித்த போது நான் பிழைத்திடுவேனா, இல்லை இறந்திடுவேனா, மருத்துவர்கள் என்னை காப்பாற்றிவிடுவார்களா, இல்லை முடியாது என்று கையைவிரித்திடுவார்களா என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் என்னுள் எழுந்தன. ஆனால் உடல் மிகவும் மோசமடைந்த நிலையில் இருந்து மீண்டுவிட்டேன்.
உடல்நிலை தேறி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பிய நான் மீண்டும் வழக்கமான நிலைக்குத் திரும்ப கடுமையாகப் போராடினேன். உடல்நல பாதிப்பால் எனது கால்களும், கைகளும் செயலிழந்து காணப்பட்டன. இதனால் கால்களையும், கைகளையும் பழைய நிலைக்கு கொண்டுவர முயன்றேன்.
எழுந்து நிற்பதே கடினமாக இருந்தது. எனினும் வைராக்கியத்துடன் கஷ்டப்பட்டு எழுந்து நடந்தேன். பேனாவை எடுத்து எழுதி கைக்கு வேலை கொடுத்தேன். உள்ளத்தையும், உடலையும் மீண்டும் புத்துணர்வாக வைத்துக்கொண்டேன். இதனால் என்னால் ஓரளவுக்கு வழக்கமான வாழ்க்கைக்கு திரும்ப முடிந்தது.
இழந்த உடல் எடையையும் மீட்டுள்ளேன். இப்போது 85 கிலோ எடை உள்ளேன். எனினும் உணவு, மருந்து எடுத்துக்கொள்ளும் விஷயத்தில் மருத்துவர் ஆலோசனையை தீவிரமாகக் கடைப்பிடித்து வருகிறேன்.
எனது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் ஆலோசித்து ஆலோசித்து, அவர்களிடம் சந்தேகத்தையும், கேள்விகளையும் எழுப்பி மருத்துவம் சம்பந்தமாக நான் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். சரியாக சொல்வதென்றால் நான் பட்டம் பெறாத டாக்டராகிவிட்டேன் என்றார் பிடல் காஸ்ட்ரோ.
இந்த பேட்டியின் போது பிடல் காஸ்ட்ரோ உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார். கேட்கும் கேள்விகளுக்கு நகைப்புடன் பதில் அளித்து எங்களை சிரிக்க வைத்துவிட்டார் என்று பிடல் காஸ்ட்ரோவிடம் பேட்டி கண்ட மெக்ஸிகோவின் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
கியூபாவை ஏறக்குறைய அரைநூற்றாண்டு காலம் ஆட்சி செய்தவர் கம்யூனிஸ தலைவர் பிடல் காஸ்ட்ரோ. 2006-ன் மத்தியில் அவர் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டார். அவரது இரைப்பையில் பிரச்னை ஏற்பட்டது. அவர் மரணத்தின் விளிம்புக்கே சென்றுவிட்டார்.
பிடல் காஸ்ட்ரோ உடல்நிலை பாதிக்கப்பட்டது அவர் மீது உயிரையே வைத்திருந்த கியூபா மக்களுக்கு பெரும் சோகமாக அமைந்தது. எனினும் அவர் மெதுவாக உடல்நலம் தேறினார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அதிபர் பதவியில் தன்னால் சிறப்பாகச் செயல்பட முடியாது என்று பிடல் காஸ்ட்ரோ கருதினார்.
இதனால் அதிபர் பதவியை தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் 2008-ல் ஒப்படைத்துவிட்டு அரசின் சிறப்பான செயல்பாட்டு தேவையான ஆலோசனைகளை மட்டும் வழங்கி வருகிறார்.
"தென்னை காப்பீட்டுத் திட்டத்தில் தவிர்க்கப்பட்ட திருப்பூர் மாவட்டம்" என்று செய்தி "தினமணி'யில் திங்கள்கிழமை (ஆக. 30) வெளியாகி இருந்தது.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட விளக்கம்:
தமிழகத்தில் 3.834 லட்சம் ஹெக்டேர் பரப்பில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. கொச்சியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தின் அறிவுறுத்தலின்படி 2009-10-ல் தென்னை பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக 22-3-2010 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
முன்னோடித் திட்டமாக இது செயல்படுத்தப்பட உள்ளது என்பதால் தென்னை அதிகமாக பயிரிடும் மாவட்டங்களான கோவை, ஈரோடு, தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், தேனி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 10 மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த ஆணை பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் பங்களிப்பு 50 சதவீதம், தமிழக அரசின் பங்களிப்பு 25 சதவீதம், விவசாயிகளின் பங்களிப்பு 25 சதவீதம் எனவும் நிர்ணயித்து ரூ. 2.65 கோடி செலவில் 2010-11 ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டமானது, கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டமாகும். இத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 10 மாவட்டங்களில் கோவையும், ஈரோடும் இடம் பெற்றுள்ளது. எனவே, திருப்பூர் மாவட்டத்தில் தென்னை காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்று வெளியான செய்தி தவறானதாகும் என்று அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக சினிமா நடிகர்களை பார்ப்பதற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் வரும். அதற்காகவே, பொது விஷேசங்களில் அவர்கள் கலந்து கொள்கையில் மக்கள் கூட்டம் அலைமோதும். இது யதார்த்தம். ஆனால் இது தனக்கு மட்டும் தான் இந்த கூட்டம் வருவதாக நினைத்துக்கொண்டு, தமிழகத்தில் அடுத்த முதல்வர் நானே என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறிவருகிறார்.
தே.மு.க 2005 ஆரம்பிக்கப்பட்டு, கடந்த சட்ட சபை தேர்தலில், 234 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியை பிடித்தது. வரும் சட்ட சபை தேர்தலில் நாங்கள், நான்கு அல்லது பத்து தொகுதியை பிடிப்போம் என பேசினால் அது ஏற்புடையதாகவும்.
z அதை விட்டு விட்டு தமிழகத்தில் அடுத்து நான் தான் முதல்வர் என பேசிவருவது உண்மையில் நல்ல காமடி தான். அவருடைய கல்லூரியிலேயே அவர் முதல்வராக முடியாது. ஏனென்றால் அதற்கும் கல்வித்தகமை வேண்டும். இவ்வாறு பேசினார் நெப்போலியன்.
கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நேற்றிரவு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ரயிலை டிரைவர்கள் குமாரசாமி, பெஞ்சமின் ஓட்டி வந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு இரவு 1மணியளவில் வந்தது. சாத்தூரில் இருந்து புறப்பட்டு 1.06 மணிக்கு சாத்தூரில் இருந்து வெங்கடாஜலபுரம் எனும் இடத்தில் வந்த போது, ரயில் தண்டவாள இணைப்பு இரண்டு அடிக்கு நீளத்திற்கு உடைந்தது. இதனால் ரயில் இன்ஞ்சின் முன்பக்க சக்கரம் தண்டவாளத்தை விட்டு விலகி, சுமார் 800மீட்டர் தொலைவுக்கு வெளியே சென்றது. டிரைவர்களின் சாமர்த்தியத்தால் ரயில் பெட்டிகளும் எதுவும் கவிழவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ரயிலில் சுமார் 1500 பயணிகள் பயணித்தனர். அவர்களில் யாருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கொள்ளப்பட்டுள்ளது. தண்டவாளங்கள் மதுரை ரயில்வே ஊழியர்கள் மூலம் சரிசெய்யப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தினால் சென்னையில் இருந்து தென்பகுதிக்கு வரும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தென் மாவட்டத்தில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில், மும்பை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் விருதுநகரில் நிறுத்தி வைக்கப்பட்டன. கொல்லம் டூ மதுரை செல்லும் பாசஞ்சர் ரயில் சாத்தூரில் நிறுத்தப்பட்டன.
கொல்லம் டூ மதுரை செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் , மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காலையில் இருந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் பயணிகள் ஆங்காங்கே தவித்தனர். சென்னையில் இருந்து விருதுநகர் வழியாக இன்று காலையில் செல்லும் தூத்துக்குடி மங்களூர், செங்கோட்டை எக்ஸ்பிரஸ், தென்காசி பாசஞ்சர் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன. காலை 9 .45 க்கு மேல் ஒவ்வொரு ரயில்களாக அனுப்பி வைக்கப்பட்டன.
சாத்தூர் அருகே ரயில் விபத்து நடந்ததும் பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர். அருகில் பஸ் வரும் சாலைக்கு அனைவரும் நடந்து சென்று தங்களுடைய பயணத்தை துவக்கினர். பயணிகள் மீட்டு உரிய பயணத்திற்கு செல்ல பஸ் போக்குவரத்தை ரயில்வே அதிகாரிகள் செய்யவில்லை என பயணிகள் குமுறினர். இது குறித்து விருதுநகர் ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது எங்களுக்கு உயர் அதிகாரிகள் தரப்பில் இருந்து எதுவும் உத்தரவு வரவில்லை என்றனர்.
இந்த ரயில் தண்டவாளம் உடைந்தும் ரயில் பெட்டிகள் கவிழாமல் இருந்தததால் பயணிகள் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. பெரும் விபத்து எவ்வாறு தவிர்க்கப்பட்டது பயணிகள் உயிர் பிழைத்தது எப்படி என்ற விவரத்தை அங்குள்ள நமது தினமலர் நிருபர் தரும் தகவல் வருமாறு :
சாத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீட்டர் தூரத்தில் இந்த விபத்து நடந்திருகிறது. முதலில் தண்டவாளம் உடைந்து கிடந்ததால் ரயில் இன்ஞ்சின் இந்த இடத்தில் இருந்து 800 மீட்டர் தொலைவுக்கு இழுத்து சென்றுள்ளது. இதில் இன்ஞ்ஜின் 4 வீல் , சிலிப்பர் கட்டை மற்றும் கற்கள் மீது ஓடியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ரயில் பெட்டிகள் எதுவும் தண்டவாளத்தை விட்டு அகலவில்லை என்பது தான் பெரும் உயிர்ச்சேதம் இல்லாமல் விபத்து முடிந்தது.
மேலும் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில்தான் ரயில் வந்திருக்க வாய்ப்பு என்பதால் இன்ஞ்ஜின் 800 மீட்டர் தொலைவுக்குள் ரயில் நின்று விட்டது. வேகம் அதிகரித்து வந்திருந்தால் ரயில் கட்டுப்பாடு இழந்து பெட்டிகள் கவிழ வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் . என்கிறார் நமது நிருபர்.
சாத்தூர் அருகே உள்ள இந்த ரயில் பாதை நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல் இருப்பதால் இது போன்று ரயில் தண்டவாளத்தில் உடைப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த பாதையில் நாள் ஒன்றுக்கு 30 ரயில் வந்து செல்கிறது. குறிப்பாக சரக்கு ரயில்களே அதிகம். இநத தண்டவாளம் 80 ஆண்டுகள் பழமையானவை. எனவே பலம் இழந்து காணப்படுகிறது.இது குறித்து வர்த்தக சங்கத்தினர் ரயில்வே துறைக்கு ரயில்பாதை புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது . இது செவிடன் காதில் ஊதிய சங்காக போனது என்கின்றனர் இந்த சங்க பிரமுகர்கள்.
இந்த சம்பவத்தில் சதி வேலை என்ற கேள்விக்கு உரிய முகாந்திரம் இல்லை. ரயில் தண்டவாளம் உடைந்த இடத்தில் வெடிபொருட்களோ, திட்டமிட்டு நடத்தப்பட்டதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை. எனவே சதித்திட்டம் இல்லை என உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2010-11-ம் ஆண்டுக்கு விவசாயிகளுக்குச் சான்று பெற்ற விதைநெல், கிலோவுக்கு ரூ.5 மானியம் வழங்கப்படும். 10 ஹெக்டேரில் செம்மை நெல் சாகுபடியைக் குழுக்களாகச் செய்யும் விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
நெல்லில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள, உழவர் வயல்வெளிப் பயிற்சிப் பள்ளிகள் நடத்தி ஒரு உழவருக்கு மானியம் ரூ.17 ஆயிரம் வழங்கப்படும். 30 விவசாயிகளுக்கு வயல்வெளிகளில் பூச்சிநோய் கண்காணிப்பு முறைகள் மேற்கொள்ளவும், பூச்சி மற்றும் நோய்த் தன்மை அறிந்து இயற்கை எதிரிகளை வயல்வெளிகளில் அழிக்காமல் பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் சிக்கனமான செம்மைநெல் சாகுபடி முறைகளை விவசாயிகள் கையாண்டு, அதிக மகசூல் பெறுவதே நோக்கம் ஆகும்.
விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் அலுவலர்களை அணுகி அரசு வழங்கும் மானியங்களையும் பயிற்சிகளையும் பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
நன்றி:தினமணி
விதை உற்பத்தியில் தன்னிறைவு காணவும் அதன் மூலம் தனிநபர் வருமானத்தை அதிகரிக்கவும் ராமநாதபுரம் மாவட்டத்தில் விதை கிராமத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் மான்ய விலையில் சான்று விதைகள் விநியோகம், விதை உற்பத்திக்கான விவசாயிகள் பயிற்சி, மானிய விலையில் சேமிப்புக் கொள்கலன் விநியோகம் ஆகிய திட்டங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தின் 11 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படுகின்றன.
சான்று விதை விநியோகம் விவசாயத்தில் கூடுதல் மகசூல் பெற பயிர் எண்ணிக்கை பராமரிப்பு அவசியம். இதற்கு சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துல் முக்கியம்.விவசாயிகளோ பொருளாதார நெருக்கடியால் சான்று பெற்ற விதைகளை வாங்கி விதைக்க சிரமப்படுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு விதைக் கிராமம் மூலம் நெல், சிறுதானியம், பயறு சான்று விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விதை உற்பத்தி தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு விவசாயிகளின் வயல்களிலேயே தரமான விதைகளை உற்பத்தி செய்ய வேளாண் துறை
உதவுகிறது.
உற்பத்தி செய்யப்படும் விதைகளில் விவசாயிகள் தங்களுக்குத் தேவையானதை
வைத்துக் கொண்டு கிராமத்திலுள்ள இதர விவசாயிகளுக்கும் விற்பனை செய்து அதன் மூலம் கிராமம் முழுவதும் தரமான விதைகள் பயன்படுத்த இத்திட்டம் வழிவகுக்கிறது.
விதை உற்பத்தி பயிற்சி: விதை கிராமத் திட்டத்தை செயல்படுத்த கிராமங்களைத்
தேர்வு செய்து அக்கிராமத்தில் உள்ள 50 விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சி வழங்குவதுடன் விதை சான்றளிப்புத் துறை வல்லுநர்களாலும் இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 3 கட்டமாக வழங்கப்படுகிறது.
விதைசேமிப்பு கொள்கலன் விநியோகம்: எலி மற்றும் பூச்சிகளால் தானியங்கள் சேதாரமாகாமல் இருக்கவும் அதன் தராமல் கெடாமல் இருக்கவும் விதைகளை சேமித்து வைத்துக் கொள்ள விதை கொள்கலன்கள் இந்தத் திட்டம் மூலம்
மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ந.சத்தியமூர்த்தி
கூறியது:
விவசாயிகளுக்கு இத்திட்டம் ஒரு சிறந்த வரப்பிரசாதம். விதை உற்பத்திப் பயிற்சியை விவசாயிகளுக்கு வழங்குவதால் விதைத் தேர்வு, ரகத்தேர்வு, உரமிடுதல், பயிர் எண்ணிக்கை பராமரிப்பு சம்பந்தமான முதற்கட்ட பயிற்சியின் போது வழங்குகிறோம்.
பூச்சி, நோய்க் கட்டுப்பாடு, நீர் நிர்வாகம், களையெடுப்பு, கலவன் நீக்குதல் மற்றும் அறுவடை தொடர்பான பயிற்சியினை 2 வது கட்டமாகவும் தரமான விதைகளை பிரித்தெடுத்தல், விதை முளைப்புத்திறன் மற்றும் இனத்தூய்மை கண்டறிதல்,
விதை சேமிப்பு ஆகியவற்றை 3-வது கட்ட பயிற்சியிலும் வழங்குகிறோம்.
இந்தப் பயிற்சிகள் அனைத்தையும் மாவட்ட வேளாண் துறை சார்பில் அந்தந்த கிராமங்களிலேயே பயிற்சியை நடத்துவதால் விவசாயிகள் வயல்களில் நேரடியாகவே பயிற்சி பெறுகின்றனர்.
எனவே விவசாயிகள் விதை கிராமத் திட்டத்தில் மானிய விலையில் விதைகள் மற்றும் விதை சேமிப்புக் கொள்கலன்கள் வாங்கிப் பயன்பெறுவதோடு கிராம அளவிலான விதை உற்பத்திப் பயிற்சியிலும் கலந்து கொள்கின்றனர் என்றார்.
நன்றீ: தினமணி
÷ஆராய்ச்சியாளர்கள் டொமினிக் க்ளோவர், எஸ்ரா பெர்க் ஆகியோர் ஆலம்பூண்டி, தென்பிலாய், கொணக்கம்பட்டு, வல்லம், செந்தூர், விக்கிரவாண்டி ஆகிய பகுதிகளுக்குச் சென்று திட்டப் பணிகளை பார்வையிட்டனர்
.÷விவசாயிகளிடம் திட்டப்பணிகள், அதன் பயன்கள் பற்றியும், அவர்களின் எதிர்பார்ப்பு, நிதிச் செலவு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தனர்.÷பின்னர் மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமியை சந்தித்து மேலும் விவரங்களை கேட்டறிந்தனர். மாவட்டத்தில் 69 ஆயிரம் ஹெக்டேர் மொத்த விவசாய நிலப்பரப்பில் 1.7 ஆயிரம் ஹெக்டேரில் தற்பொது செம்மை நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அடுத்துவரும் நெல்சாகுபடி பருவகாலத்தில் இன்னும் அதிக அளவிலான நிலப்பரப்பில் பயிரிட விவசாயிகள் தயாராக உள்ளனர் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
÷இந்த கலந்துரையாடலின்போது திண்டிவனம் விதை ஆராய்ச்சி மைய பேராசிரியர் ராமமூர்த்தி, வேளாண்மை இணை இயக்குநர் கே.அரங்கநாதன், நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சக்கரவர்த்தி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் எஸ்.அன்புமணி ஆகியோர் உடனிருந்தனர்.
நன்றி: தினமணி
தென்னையின் குருத்து ஓலைகளைத் தாக்கும் இந்த தென்னை இலை வண்டின் தாக்குதல், இந்தியாவுக்கு மிக அருகில் இருக்கும் தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மியான்மர், சீனா, மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளிலும் மாலத் தீவிலும் காணப்படுகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர். தென்னை இலை வண்டு குறித்தும் அதைக் கட்டுப்படுத்துவது குறித்தும் வேளாண் துறை களப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் அண்மையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
"பப்பாளி மாவுப்பூச்சி, கரும்பில் அசுவுணி தென்னையில் ஈரியோபைட், சிலந்தி போன்ற வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த பூச்சிகளால் பல்வேறு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தென்னை இலைத் தண்டு பூச்சி தாக்குதல் வர வாய்ப்பு உள்ளது' என்று வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ப.முருகேச பூபதி தெரிவித்தார்.
"தென்னையைத் தாக்கும் இலை வண்டு அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியது. இந்த வண்டு இளம் கன்றுகளை தொடர்ச்சியாகத் தாக்கினால், தென்னங்கன்றுகள் பட்டுப்போய்விடும். எண்ணெய் பனை, பனைமரம், பாக்குமரன், ராயல் பனை, சீனா விசிறி பனை, கலிபோர்னியா விசிறி பனை போன்ற தென்னை குடும்பத்தைச் சேர்ந்த 20 வகையான பயிர்களைத் தாக்கக் கூடியது' என்று பெங்களூரைச் சேர்ந்த வேளாண்சார் பூச்சி ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ஆர்.ஜே.ரபீந்திரா. காவி கலந்த சிவப்பு நிறம் உடைய இந்த வண்டு தென்னை ஓலைகளில் வாழ்க்கை நடத்துகிறது.
இதன் பருவ காலம் 5-லிருந்து 7 வாரங்கள். இரவில் மட்டுமே தென்னை மரங்களைத் தாக்கும் இயல்புடையது. வளர்ந்த வண்டுகள் 3 மாதம் வரை உயிர் வாழக்கூடியது. இதன் புழு மற்றும் வண்டு பருவத்தில் இலைகள் மற்றும் குருத்தோலைகளின் பச்சையத்தை சுரண்டி உண்பதால் இலைகளின் ரினம் மாறி கருகி காணப்படும்.
இதன் தாக்குதல் 8 ஓலைகளில் இருந்தாலே மகசூல் பாதிக்கும். இந்த வண்டு 10 வயதுடைய தென்னை மரங்களை அதிகமாக தாக்குகிறது. இதனால் மகசூல் இழப்பு அதிகமாக ஏற்படுகிறது. தாக்கப்பட்ட தென்னங்கன்றுகள் மற்றும் தாக்கப்பட்ட அலங்கார பனைகளை இறக்குமதி செய்யும்போது இந்த வண்டுகள் பரவ வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இப்பூச்சி தென்பட்டால் உடனடியாக வேளாண் அலுவலகம் அல்லது வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் நிலையங்களை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
நன்றி :தினமணி
சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழக உழவர் முன்னணி சார்பில் இன்று காலை நடந்த காவிரி ஆற்று நீர் உரிமைக் கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வெங்கட்ராமன் இவ்வாறு கூறினார்.
தமிழகத்தின் காவிரி ஆற்று நீர் உரிமையை மெல்லக் கொன்றுக் கொண்டிருக்கும் இந்திய, தமிழக அரசுகளைக் கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக உழவா முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. சி.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
![]() |
FILE |
ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய, தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் திரு.கி.வெங்கட்ராமன் பேசியதாவது:
திராவிட நல்லிணக்கம் பேசி, காவிரி உரிமையை தமிழக முதலமைச்சர் கருணாநிதி கைகழுவிவிடுகிறார். இதுவரை கர்நாடக முதலமைச்சர்கள்தான் கர்நாடகாவில் மழை பொழிந்து அணைகள் நிரம்பினால் தமிழகத்திற்கு தண்ணீர் விடுவோம் என்று சொல்லி வந்துள்ளனர். ஆனால் இப்போது கோவையில் அண்மையில் பேசிய முதல்வர் கருணாநிதி கர்நாடகத்தில் போதிய மழை பொழிந்தால்தான் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று பேசியுள்ளார்.. இது கர்நாடகத்தின் குரலை எதிரொலிப்பதாகும்.
இடைக்காலத் தீர்ப்பு நடைமுறையில் இருப்பதாக தமிழக உழவர் முன்னணி கடந்த 3 ஆண்டுகளாக, இறுதித் தீர்ப்பு வந்த நாளில் இருந்து சொல்லி வந்தது. ஆனால், இப்போது தான் இதை கருணாநிதி கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த கால தாமதம் காவிரி பாசனப் பகுதியின் குறுவை சாகுபடியை கொன்று விட்டது.
இதே போக்கு நீடித்தால் உழவர்கள் வேளாண்மையை விட்டு ஒதுங்குவதோடு, தமிழகத்தில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலை வரும். அதனால், இப்போதே நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாட்டு உழவர்களின் குரலை எதிரொலித்த இவ்வார்ப்பாட்டத்தில், திரளான உழவர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.
நன்றி:தமிழ் வெப்டுனியா
கோபிசெட்டிபாளையம்:மஞ்சள் விலை உயர்ந்ததால் கோபி அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசனப் பகுதி விவசாயிகள் மஞ்சள் சாகுபடியை அதிகப்படுத்தினர். நெல் சாகுபடி பரப்பளவு கணிசமாக குறைந்ததால், நெல் விலை உயர்ந்துள்ளது.அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, கீழ்பவானி, குண்டேரிப்பள்ளம் அணை பாசனப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் முதன்மையாக பயிரிடப்பட்டு வந்தது.நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு, வாழை, மஞ்சள் பயிர்களை விவசாயிகள் பயிரிடுவது வழக்கம். 2009 துவக்கத்தில் இருந்து மஞ்சள் விலை படிப்படியாக அதிகரித்தது. ஒரு கட்டத்தில் குவிண்டால் மஞ்சள் விலை 17 ஆயிரம் ரூபாயை நெருங்கியது. இதனால், கோபி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நெல்லுக்கு இணையாக மஞ்சள் பயிரிடத் துவங்கினர்.
சென்றாண்டு இரண்டாம் போகத்திலேயே மஞ்சளை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டனர். நெல் பயிரிடும் விவசாய பரப்பளவு கணிசமாக குறைந்தது.நெல்லுக்கு தேவை அதிகரித்ததால், விவசாயிகளை நேரடியாக தேடிச் சென்று, வியாபாரிகள் நெல்லை வாங்கினர். இதனால், இரண்டாம் போக சாகுபடி முடிவில் கோபி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அமைக்கப்பட்ட அரசு கொள்முதல் நிலையங்களில் கூட எதிர்பார்த்தளவு நெல் வரவில்லை. இந்நிலையில், நெல் சாகுபடி குறைவால் தற்போது விலை அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் டீலக்ஸ் பொன்னி நெல் ஒரு பொதி (264 கிலோ) 3,300 ரூபாய் வரை விற்றது. தற்போது 3,800 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஏ.பி.டி., 2,500 ரூபாயில் இருந்து 3,000 ரூபாய்க்கும், ஏ.எஸ்.டி., இட்லி குண்டு நெல் ரகத்தின் விலை ஒரே சீராக இல்லாமல் ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது.கர்நாடகா டீலக்ஸ் நெல் ஒரு கிலோ 14 ரூபாயிலிருந்து 19.50 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.
நெல் விலை உயர்வால் கர்நாடகா டீலக்ஸ் அரிசி 75 கிலோ மூட்டை 2,000 ரூபாயில் இருந்து 2,100 ரூபாய்க்கும், டீலக்ஸ் 1,800 லிருந்து 2,150 ரூபாய்க்கும், ஏ.டி.டி., 1400 ரூபாயில் இருந்து 1,550 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.கோபி அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் கீழ்பவானி பகுதிகளில் கடந்த இரண்டாம் போகத்தில் நெல் சாகுபடி பரப்பளவு குறைந்ததாலும், தஞ்சை வட்டாரத்தில் பயிரிடப்பட்ட நெல் வகைகள், வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டதாலும், நெல் விலை தற்போது உயர்ந்துள்ளது.
வங்கிகள் கடன் கொடுக்கும் முன், நீங்கள் என்ன தொழில் துவங்குகிறீர்கள்; இப்பகுதியில் லாபகரமான தொழிலாக இருக்குமா; தொழில் திட்ட வரையறைக்கு தேவையான முன் தொகை, உற்பத்தி, பொருட்கள் பயன்பாடு குறித்து நுண்ணறிவு உள்ளதா? என்பதை ஆய்வு செய்யும். பாரத ஸ்டேட் வங்கி எட்டு சதவீத வட்டியில் கடன் வழங்குகிறது.ஒரு சில திட்டங்களில் கடன் பெற்றவர்கள் ஓராண்டு வரை திரும்ப செலுத்த வேண்டியதில்லை என்பதை இரண்டு ஆண்டுகளாக உயர்த்தியுள்ளோம்.
முறையாக கடனை திரும்ப செலுத்தும் நபர்களுக்கு மொத்த கடன் தொகையில் ஒரு சதவீதம் திரும்ப வழங்கப்படுகிறது. விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விவசாய கருவிகள் வாங்கவும் கடன் வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.விதை உற்பத்தியாளர் சங்க தலைவர் மகுடபதி முன்னிலை வகித்தார். கிளை மேலாளர் வேலுசாமி வரவேற்றார். கோவை ஏ.ஜி.எம்., ரவீந்திரன், வங்கியின் சேவை திட்டங்கள் குறித்து பேசினர். கிளை மேலாளர் பழனிச்சாமி நன்றி கூறினர்.
கோபிசெட்டிபாளையம்:தென்னை கருப்பட்டிக்கு தொடர்ந்து விலை குறைந்து வரும் நிலையில், பனை கருப்பட்டி விலை கிலோவுக்கு ஒரு ரூபாய் 10 பைசா வரை அதிகரித்துள்ளது.திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் கூட்டுறவு சங்கத்தில் தென்னை மற்றும் பனை கருப்பட்டி ஏலம் நடந்து வருகிறது.கோபி, குன்னத்தூர், பெருந்துறை, சிறுவலூர், கொளப்பலூர், கெட்டிசேவியூர், பங்களாப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென்னை மற்றும் பனை கருப்பட்டியை விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வருகின்றனர்.பனை கருப்பட்டிக்கு தற்போது சீஸன் இல்லாததால் குறைந்தளவே விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.கோடைகாலம் முடிந்து விட்டதால் இளநீருக்கு தேவை குறைந்துள்ளது. விவசாயிகள் இளநீர் மற்றும் தேங்காய்க்கு பதிலாக தென்னை கருப்பட்டி உற்பத்தியில் ஈடுபட துவங்கினர்.தென்னை கருப்பட்டி உற்பத்தி அதிகரித்துள்ளதால், விலையும் இறங்குமுகமாக உள்ளது.
குன்னத்தூர் கூட்டுறவு சங்கத்துக்கு நடப்பு வாரம் 13 ஆயிரம் கிலோ தென்னை கருப்பட்டி ஏலத்துக்கு வந்தது. கிலோ ஒன்றுக்கு 39.10 ரூபாய் வரை விவசாயிகளுக்கு கிடைத்தது. கடந்த வாரத்தை விட 1,000 கிலோ தென்னை கருப்பட்டி வரத்து அதிகரித்த போதிலும், 10 பைசா விலை குறைந்திருந்தது. ஐந்து லட்சத்து 8,000 ரூபாய் மதிப்பில் தென்னை கருப்பட்டி வர்த்தகம் நடந்தது.பனை கருப்பட்டி 1,000 கிலோ மட்டும் ஏலத்துக்கு வந்தது. கிலோ ஒன்றுக்கு 57.10 ரூபாய் வரை விற்றது. கடந்த வாரத்தை விட ஒரு ரூபாய் 10 பைசா வரை விலை அதிகரித்திருந்தது. 51 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பில் பனை கருப்பட்டி வர்த்தகம் நடந்தது. நடப்பு வாரத்தில் தென்னை மற்றும் பனை கருப்பட்டிகள் ஐந்து லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடந்தது.
திருச்சி: அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மூன்று நாள் 7வது அகில இந்திய மாநாடு இன்று திருச்சியில் துவங்குகிறது. மாநாட்டின் நிறைவு விழாவில் திரிபுரா மாநில முதல்வர் மாணிக்சர்க்கார் பங்கேற்கிறார்.திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மூன்று நாள் 7வது அகில இந்திய மாநாடு இன்று துவங்குகிறது.மாநாட்டில் ஏற்றப்படும் கொடி ஆந்திரமாநிலம் முடிகொண்டா என்ற இடத்தில் நிலமீட்சி போராட்டத்தில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஏழு தியாகிகள் நினைவாக அங்கிருந்து எடுத்து வரப்படுகிறது.
இன்று காலை 10 மணிக்கு துவங்கும் மாநாட்டில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க தலைவர் பட்டூர் ராமையா, எம்.பி., ரங்கராஜன், அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் ராமச்சந்திரன் பிள்ளை, விவசாய தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் விஜயராகவன் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.மூன்று நாட்கள் நடக்கும் மாநாட்டில் விவசாயிகள், விவசாயம் தொடர்பான பல தலைப்புகளில் கருத்தரங்கம் நடக்கிறது.வரும் 19ம் தேதி மாநாட்டில் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் திரிபுரா மாநில முதல்வர் மாணிக்சர்க்கார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார். மாநாட்டில் சங்கத்தின் பொதுக்குழு தேர்வு, தீர்மானம், ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
தென்னை, நிலக்கடலை, பருத்தி மற்றும் சிறு தானிய பயிர்களுக்கு காப்பீடு செய்து, இழப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராஜ் அறிக்கை:தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள், தென்னை காப்பீட்டு திட்டத்தில் சேர்வதன் மூலம் வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், எதிர்பாராத தீ விபத்து, நில அதிர்வு, சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தில் இருந்து மீளலாம்.தமிழக அரசும், தென்னை வளர்ச்சி வாரியமும் இணைந்து விவசாயிகளுக்கு இந்த காப்பீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. தனிப்பயிராகவோ, ஊடுபயிராகவோ, வயல் வரப்புகளில் வரிசையாகவோ, வீட்டுத்தோட்டத்திலோ தென்னை நடவு செய்திருந்தால் காப்பீடு செய்யலாம். குறைந்தபட்சம் 10 பலன் தரும் மரங்களாவது சாகுபடி செய்திருக்க வேண்டும்.
காப்பீட்டு தொகை மற்றும் பிரிமியம் செய்த நான்காவது ஆண்டில் இருந்து 15வது ஆண்டு வரையுள்ள மரங்கள் மற்றும் 16வது ஆண்டில் இருந்து 60ம் ஆண்டு வரையுள்ள மரங்கள் என இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தி காப்பீடு செய்ய வேண்டும்.பிரிமிய தொகையில் 50 சதவீதம் தென்னை வளர்ச்சி வாரியமும், 25 சதவீதம் மாநில அரசும் மானியமாக வழங்குகிறது. மீதமுள்ள 25 சதவீதம் பிரிமியம் மட்டும் வசூலிக்கப்படும். எந்த தேதியில் பிரிமியம் செலுத்தப்படுகிறதோ, அன்றில் இருந்து ஒரு ஆண்டுக்கு பாலிசி வழங்கப்படும். ஆண்டு தோறும் பிரிமியம் செலுத்தி புதுப்பித்துக்கொள்ளலாம். பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒரு வாரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். உரிய பரிசீலனைக்கு பின் 45 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை இன்சூரன்ஸ் கம்பெனி வழங்கும். இந்த திட்டம் பற்றிய விபரங்களுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நேரிலோ, 99437 37557, 94438 21170 மற்றும் 94866 85369 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பயிர் காப்பீட்டு திட்டம்: பருவநிலை மாற்றங்களால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களில் மகசூல் இழப்பும், பொருளாதார இழப்பும் ஏற்படாமல் இருக்க அனைத்து விவசாயிகளும் "வானிலை சார்ந்த பயிர்க் காப்பீட்டு திட்டத்தில்' சேர்ந்து பயனடைய வேண்டும்.ஒவ்வொரு வட்டாரத்திலும் தானியங்கி வானிலை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் உதவியுடன் பருவநிலை மாற்றங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்படுவதுடன், இந்த திட்டத்தில் சேர்ந்து பிரிமியம் செலுத்தும் விவசாயிகளுக்கான காப்பீட்டுத் தொகை நேரடியாக கம்பெனி மூலம் காசோலையும் அனுப்பி வைக்கப்படும்.
விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியம் வரியுடன் ஏக்கருக்கு மக்காச்சோளத்திற்கு 276 ரூபாயும், மற்ற சிறு தானியங்களுக்கு 138 ரூபாயும், நிலக்கடலைக்கு 386 ரூபாயும், பருத்தி (இறவை) 827 ரூபாயும், மானாவாரி பருத்திக்கு 529 ரூபாயும், பயறு வகை பயிர்களுக்கு 138 ரூபாயும் செலுத்த வேண்டும்.இதற்கான படிவங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வழங்கப்பட்டு, பிரிமியம் தொகையும் அங்கேயே செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயிர் காப்பீடு செய்தால், மகசூல் மற்றும் பொருளாதார இழப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.இவ்வாறு, அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. சபையின் மனிதவள மேம்பாட்டுத்துறை இந்தியா குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வறிக்கை வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்பட உள்ளது. அவ் ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் தற்போது தெரிய வந்துள்ளது. அந்த தகவல்கள் இந்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுப்பதாக உள்ளது.
2020-ம் ஆண்டு அதாவது இன்னும் 10 ஆண்டுகளில் உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக இந்தியா உயர்ந்து விடும் என்று கூறப்படும் நிலையில், இந்தியாவில் 8 மாநிலங்களில் மிக கடுமையான வறுமை நிலவுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரபிரதே சம், மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களில் மக்கள் வறுமையில் சிக்கி தவிப்ப தாக குறிப்பிடப்பட்டுள்ளது.
8 மாநிலங்களிலும் 42 கோடி பேர் வறுமையில் தவிக்கிறார்கள். ஆனால் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள 26 நாடுகளில் 41 கோடி பேர் வறுமையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியாவில் வறுமை அதிகமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியப் பெண்களில் பாதிபேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை மூலம் கீழ்பவானி, அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, காலிங்கராயன், தடப்பள்ளி பாசன பகுதிகள், குண்டேரிப்பள்ளம், வரட்டுபள்ளம், ஒரத்துப்பாளையம் ஆகிய அணைகள் மற்றும் குளங்கள், குட்டைகள், சிறு அணைக்கட்டு மூலம் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யப்படுகிறது. பத்தாண்டாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களின் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது. விதைகள், உரத்தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு, பருவமழை ஏமாற்றம், விவசாயத்துக்கு தேவைப்படும் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளின் உற்பத்தி குறைவு, விவசாய கூலியாட்கள் பற்றாக்குறை, இளைய தலைமுறையினரின் மாற்று தொழிலில் ஏற்பட்ட ஆர்வம் உள்ளிட்ட காரணங்களால், விவசாயம் மெல்ல மெல்ல நலிந்து வருகிறது. விவசாய தொழிலை காப்பாற்ற அரசு, மானிய விலையில் விதை மற்றும் உரம், விவசாய கூலி தொழிலாளர் பற்றாக்குறையை நீக்க நவீன தொழில் நுட்பத்தின் மூலமாக இடு பொருட்கள் அறிமுகம் ஆகியவற்றை செய்து வந்தாலும், கூலியாட்கள் பற்றாக்குறை பிரச்னை தொடர்கிறது. இந்நிலையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், விவசாய பணிகளை மேலும் பாதித்தது. வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆண், பெண் பேதமில்லாமல் நாள் ஒன்றுக்கு முதலில் 80 ரூபாய் வழங்கப்பட்டது. இதனால் விவசாய பணிகளுக்கு சென்ற 90 சதவீதம் பேர் வேலை உறுதியளிப்பு திட்டத்துக்கு சென்று விட்டனர்.
இதனால் விவசாய பணிகளை மேற்கொள்ள போதிய ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டு முதல் தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 100 ரூபாயாக கூலி உயர்த்தப்பட்டது. எட்டு மணி நேர வேலை என்பதால், விவசாய தொழிலில் பழுத்த அனுபவம் வாய்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஊரக வேலைக்கு சென்று விட்டதால், விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து ஏப்ரல் மாதம் அரக்கன்கோட்டை, தடப்பள்ளி பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. போதிய விவசாய கூலியாட்கள் இல்லாததால் நடவு பணிகள் தாமதமாகதான் தொடங்கியது. அணையின் நீர்மட்டம் 70 அடியை தாண்டியுள்ள நிலையில் நேற்று காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறையால், உணவு தானிய உற்பத்தி பணிகள் சிறப்பாக நடைபெறுமா என்ற கேள்விகுறி எழுந்துள்ளது.
உணவு தானிய உற்பத்தி செய்யப்படும் கால கட்டங்களில், கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்படும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். இதன் மூலம் விவசாய கூலி தொழிலாளர், விவசாயத்தில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். மேலும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் விவசாயத்தை சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அணைகளில் போதிய தண்ணீர் வசதி இருந்தும், விவசாய பணிகளை மேற்கொள்ள ஆட்கள் இல்லாமல் உணவு தானிய உற்பத்தி வெகுவாக குறைந்து விடும் என்பதில் ஐயமில்லை.
ஜூனில் பொழிந்தது, வெப்பச் சலனத்தால் பொழிந்த மழை தான்.கோவை மாவட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் விவசாயத்திற்கு பருவமழை தான் ஜீவாதாரம். கடந்த 3 ஆண்டுகளில் மாவட்டத்தில் பொழிந்த மழை அளவு விவரம்: 2007-ல் ஒட்டுமொத்த மழை அளவு 861.8 மி.மீ., 2008-ல் மொத்த மழை அளவு 726.6 மி.மீ., 2009-ல் 824.4 மி.மீ., என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை. மையம் கணக்கிட்டுள்ளது.கடந்த 3 ஆண்டுகளில் மாவட்டத்தில் பொழிந்த தென்மேற்குப் பருவமழை அளவு விவரம்: 2007-ல் 241.3 மி.மீ., 2008-ல் 138.9 மி.மீ., 2009-ல் 248 மி.மீ. மழைப் பொழிவு இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவகாலத்தில் சராசரியாக 140 மி.மீ. முதல் 150 மி.மீ. அளவுக்கு மழைப்பொழிவு கிடைக்க வேண்டும்.
நடப்பு சாகுபடி பயிர்கள்கோவை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் (ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில்) சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் விவரம்: மாவட்டத்தில் மொத்தம் 60 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 2,000க்கும் கூடுதலான ஹெக்டேர் பரப்பளவில் நாற்றங்கால் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.அதுதவிர, சோளம், கம்பு உள்ளிட்ட தானிய வகைகள் 3,507 ஹெக்டேர் பரப்பளவிலும், உளுந்து, துவரை உள்ளிட்ட பயிறு வகைகள் 2109 ஹெக்டேர் பரப்பளவிலும் பயிரிடப்பட்டுள்ளது. எண்ணெய் வித்துப் பயிர்கள் 2,268 ஹெக்டேர் பரப்பளவிலும், பருத்தி 177 ஹெக்டேர் பரப்பளவிலும் பயிரிடப்பட்டுள்ளது.
கரும்பு சாகுபடி 10 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 8,131 ஹெக்டேர் பரப்பளவில் நடப்பு சாகுபடி உள்ளது. விவசாயத்திற்கும், குடிநீர் ஆதாரத்திற்கும் கைகொடுக்கும் தென்மேற்குப் பருவமழை கோவை மாவட்டப் பகுதிகளில் பலமாக பொழிவது எப்போது என வானம் பார்த்து காத்திருக்கின்றனர் விவசாயிகள்.
மீள்பதிவு - நன்றி -தினமணி
2010-11 ம் நிதியாண்டில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள கடன் தொகைக்காக வங்கி ரூ. 8 ஆயிரம் கோடி வரை கடன் வாங்க வேண்டியுள்ளது. நடப்பு நிதியாண்டில் மறுபயிர் கடனாக ரூ. 40 ஆயிரம் கோடி வழங்க முடிவு செய்துள்ளோம். இவற்றில் ரூ.13 ஆயிரம் கோடி நீண்ட காலக் கடனாகவும், 26 ஆயிரம் கோடி குறுகியக் கால கடனாகவும் வழங்கப்படும்.
கடந்த ஆண்டில் இது ரூ.36 ஆயிரம் கோடியாக இருந்தது. இந்த நிதியாண்டில் ரூ. 8 ஆயிரம் கோடி வரை கடன் வாங்க வங்கி முடிவு செய்துள்ளது. கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் இந்தத் தொகை திரட்டப்படும்.வங்கியில் கடனுக்காக விண்ணப்பிக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. விவசாயத்துக்கு தொடக்கத்தில் அதிக முதலீடு தேவைப்படுகிறது.
விவசாயிகளின் தேவைகளை முடிந்த அளவுக்கு நபார்டு வங்கி நிறைவு செய்து வருகிறது. கடந்த ஆண்டில் சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நபார்டு வங்கியில் கடன்பெற்று பயனடைந்துள்ளனர்.விவசாயம் தவிர கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக ரூ.18 ஆயிரம் கோடியை பல்வேறு மாநிலங்களுக்கு நபார்டு வங்கி கடனாக அளித்துள்ளது என்றார் அவர்.
2010-11 ம் நிதியாண்டில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள கடன் தொகைக்காக வங்கி ரூ. 8 ஆயிரம் கோடி வரை கடன் வாங்க வேண்டியுள்ளது. நடப்பு நிதியாண்டில் மறுபயிர் கடனாக ரூ. 40 ஆயிரம் கோடி வழங்க முடிவு செய்துள்ளோம். இவற்றில் ரூ.13 ஆயிரம் கோடி நீண்ட காலக் கடனாகவும், 26 ஆயிரம் கோடி குறுகியக் கால கடனாகவும் வழங்கப்படும்.
கடந்த ஆண்டில் இது ரூ.36 ஆயிரம் கோடியாக இருந்தது. இந்த நிதியாண்டில் ரூ. 8 ஆயிரம் கோடி வரை கடன் வாங்க வங்கி முடிவு செய்துள்ளது. கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் இந்தத் தொகை திரட்டப்படும்.வங்கியில் கடனுக்காக விண்ணப்பிக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. விவசாயத்துக்கு தொடக்கத்தில் அதிக முதலீடு தேவைப்படுகிறது.
விவசாயிகளின் தேவைகளை முடிந்த அளவுக்கு நபார்டு வங்கி நிறைவு செய்து வருகிறது. கடந்த ஆண்டில் சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நபார்டு வங்கியில் கடன்பெற்று பயனடைந்துள்ளனர்.விவசாயம் தவிர கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக ரூ.18 ஆயிரம் கோடியை பல்வேறு மாநிலங்களுக்கு நபார்டு வங்கி கடனாக அளித்துள்ளது என்றார் அவர்.
இந்த விலையேற்றத்தினால் ரயில்வே துறைக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயில், தற்போது இயக்கப்படும் பயணிகள் ரயில்களில் 51 சதவீமும், சரக்கு ரயில்களில் 37 சதவீதமும் டீசலில் தான் ஓடுகின்றன. இந்த ரயில்களுக்காக, ஆண்டுதோறும் ரூ. 4,500 கோடி செலவில் 230 கோடி லிட்டர் டீசல் வாங்கப்படுகிறது. தற்போது, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளதால், ரயில்வேக்கு கூடுதலாக ரூ.460 கோடி செலவாகும் நிலை உருவாகி உள்ளது. இதை தவிர்ப்பதற்காக, மாற்று எரிபொருளான பயோ-டீசலை பயன்படுத்த ரயில்வே முடிவுசெய்துள்ளது. இதற்காக, பயோ டீசல் தயாரிக்கும் நிலையங்களை சொந்தமாக சென்னை உள்ளிட்ட இடங்களில் அமைக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக, டெண்டர் கோரப்பட்டுள்ளது. இது சம்பந்தமான பணிகள் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் முடிவடையும். பயோ டீசல் மூலம் ரயில்களை இயக்கும் திட்டம் உள்ளது. இதற்குத் தேவை சில தொழில்நுட்ப மாற்றங்கள், அவ்வளவே. எனவே இந்தத் திட்டம் நிரந்தர திட்டமாக எதிர்காலத்தில் இருக்கும். இனி ரயில்களுக்கு பயோ டீசலைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்வேயில் ஏற்படும் செலவீனம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.
தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்