இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

அமராவதி புதிய ஆயக்கட்டு பாசன உயிர் நீர் திறப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி

அமராவதி புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அமராவதி அணையின் பிரதான கால்வாயில் நேற்று உயிர் தண்ணீர் திறக்கப்பட்டது. உடுமலை அமராவதி அணை மூலம் புதிய ஆயக்கட்டு பாசனத்தின் உடுமலை, தாராபுரம் தாலுகாவிற்குட்பட்ட 25 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 2009 ஆக., முதல் ஜன.,31 வரை சுற்றுக்கள் அடிப்படையில் தண்ணீர் வழங்கப்பட்டு, பாசன காலம் நிறைவு பெற்றது.இரண்டு மாதமாக மழை இல்லாமல், வறட்சியான நிலை நீடித்து வருவதால் பாசன பகுதிகளில் நிலைப்பயிராக உள்ள தென்னை, கரும்பு, நெல் ஆகிய பயிர்களை காப்பாற்றவும், கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் குடிநீர் தேவை குறித்து இரண்டு சுற்று உயிர் தண்ணீர் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அமராவதி சர்க்கரை ஆலை விவசாயிகளும், சர்க்கரை ஆலை அரவைக்கு கரும்பு வெட்டுவதற்கு இரண்டு மாதம் உள்ளதால், பல ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டுள்ள கரும்புக்கு சிறப்பு தண்ணீர் திறக்க வலியுறுத்தினர். இதை ஏற்று பிரதான கால்வாயில் பத்து நாள் சிறப்பு தண்ணீர் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது.
இதையடுத்து, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு பிரதான கால்வாயில் வினாடிக்கு 440 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முதல் பிப்., 12 ம் தேதி வரை ஏழு நாட்களுக்கு முதல் சுற்றும், விவசாயிகள் கேட்கும் போது மீதம் உள்ள மூன்று நாள் தண்ணீர் வழங்கப்படுகிறது. அணை நிலவரம்: நேற்று காலை நிலவரப் படி, அமராவதி அணை நீர் மட்டம் 63.96 அடியாகவும், நீர் இருப்பு 1977.22 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 46 கன அடி நீர் வரத்து இருந்தது. அணையிலிருந்து பிரதான கால்வாயில் 446 கன அடி நீர் திறந்து விடப்பட்டிருந்தது.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment