இறால் மீனுக்கு வைரஸ் நோய்: ஏற்றுமதியில் பாதிப்பு
4:33 PM இறால் மீனுக்கு வைரஸ் நோய்: ஏற்றுமதியில் பாதிப்பு, சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
ராமநாதபுரம்:இறால் மீனுக்கு வைரஸ் நோய் உருவாகுவதால், இதன் ஏற்றுமதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பண்ணைகளில் வளர்க்கப்படும் இறால் மீன்களுக்கு தற்போது வெண்புள்ளி வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கடல்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையகம் அறிவித்துள்ளது. 2007-08ல் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 223 டன் இறால் மீன்கள் ஏற்றுமதியாகின. ஆனால், கடந்தாண்டு வெண்புள்ளி வைரஸ் காரணமாக இறால் ஏற்றுமதி ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 42 டன்னாக குறைந்து உள்ளது. வைரஸ் நோயை போக்குவதற்கு, இதுவரை மருந்து கண்டு பிடிக்கவில்லை, என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, நோய் வருமுன் தடுப்பதே இதற்கு சரியான தீர்வாக உள்ளது. இதனிடையே,நோய் தடுப்பதற்காக கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையகம், இறால் வளர்ப்போருக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளன.
அதில்," இறால் வளர்ப்போர் சரியான விதத்தில் பண்ணையை தயார்படுத்த வேண்டும், நீர் மேலாண்மை, பி.சி.ஆர்.( பாலி மரேஸ் செயின் ரீஆக்சன்) பரிசோதனை செய்யப்பட்ட, வளமான இறால் குஞ்சுகளை பொறிப்பகத்தில் தேர்வு செய்தல், பண்ணை குட்டையில் குறைந்த அளவில் இருப்பு செய்தல், பண்ணை நீர் மாற்றத்தை வெகுவாக குறைத்து விடுதல், சரியான முறையில் தீவனமிடுதல், குழுவாக செயல்படுத்தல் போன்ற வழிமுறைகளால் இறால் மீனணகளை நோயின் தாக்கத்திலிருந்து காக்கலாம்,' என கூறி உள்ளது.
இறால் குஞ்சுகள் வெண்புள்ளி வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய ,பி.சி.ஆர். ஆய்வு கூடங்கள் இந்தியா முழுவதும் நூற்று கணக்கில் செயல்படுகின்றன. தமிழ்நாட்டில் 11 ஆய்வுகூடங்களே சரியான விதத்தில் ஆய்வுகளை மேற்கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது. கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையகம் பரிந்துரை செய்துள்ள ஆய்வு கூடங்களில் மட்டுமே இறால் வளர்ப்போர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஆய்வுகூடங்கள்: ராம் அக்வா லாப்(கூனிமேடு) சி.பி. அக்வாகல்சர் பிரைவேட் லிட்., (செட்டிக்குளம்) இன்ண்டஸ் அக்வா பி.சி.ஆர். லாப், என்.கே. மெரைன் லாப், சி.பி. அக்வாகல்சர் இந்தியா லிட்., எம்பையோசிஸ் இந்தியா(மரக்கானம்) வைசாகி பையோ மரைன் பி.லிட்., (கைபனிக்குப்பம்) குரோபெஸ்ட் பீட்ஸ்(புதுநடுக்குப்பம்) ஜீனோம்பார் ஷ்ரிம்ஸ் ரிசர்ச் டையாகனஸ்டிக் இன்டிட்டியூட் (பனையூர் ) பாட்லாப் பையோ டெக், (நீலாங்கரை ) ஆசியன் ஆனாலிட்டிகல் லாபரேட்டரீஸ் பி.லிட்.,(பாலவாக்கம்).
குறிச்சொற்கள்: இறால் மீனுக்கு வைரஸ் நோய்: ஏற்றுமதியில் பாதிப்பு, சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது