இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

தனியார் வியாபாரிகளிடம் ​குவியும் சம்பா நெல்

கடலூர் மாவட்டத்தில் சம்பா நெல் கொள்முதலில் தனியார் வியாபாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதால் சன்னரக நெல் முழுவதும் தனியார் வியாபாரிகளிடம் குவிந்த வண்ணம் உள்ளன.கடலூர் மாவட்டத்தில் காவிரி பாசனப் பகுதிகள் 1.5 லட்சம் ஏக்கர் உள்ளிட்ட 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் பயிரிடப்பட்டு இருந்தது.ஜனவரி 2-வது வாரத்தில் அறுவடை தொடங்கியது.​ இதுவரை 50 சதவீதம் பகுதிகளில் நெல் அறுவடை முடிந்து விட்டது.நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 114 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.இவற்றில் சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.​ 1100 ஆகவும் மற்ற ரகங்கள் ரூ.​ 1050-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.ஆனால் அரசு கொள்முதல் நிலையங்களை விட விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடமே அதிகமாக நெல் விற்பனை செய்கின்றனர்.​ தனியார் வியாபாரிகள் பலர் களத்துக்கே சென்றும்,​​ ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் நெல் கொள்முதல் செய்கின்றனர்.வியாழக்கிழமை சிதம்பரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் விலை குவிண்டால் ரூ.​ 950 முதல் 1,250 வரையிலும்,​​ விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் குவிண்டால் ரூ.​ 928 முதல் ரூ.​ 1,300 வரையிலும்,​​ விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் குவிண்டால் ரூ.​ 970 முதல் ரூ.​ 1,060 வரையிலும்,​​ திருச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.​ 1,000 முதல் ரூ.​ 1,600 வரையிலும் தனியார் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.கடலூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கரில் நெல் அறுவடை முடிந்துவிட்டது.​ இதில் இருந்து ஏறத்தாழ 2 லட்சம் டன் நெல் கிடைத்து இருக்கிறது.அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் 60 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்ய்யப்பட்டது.இந்த ஆண்டு 30 ஆயிரம் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு,​​ வெள்ளிக்கிழமை வரை 8 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது என்று,​​ நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மேலும் மிகச்சன்ன ரகங்களான பொன்னி,​​ பிபிடி நெல் அரசு கொள்முதல் நிலையங்களுக்கு வருவதே இல்லை என்றும் அந்த அதிகாரி கூறினார்.எனவே அரசு அறிவித்த விலையைவிட சற்று கூடுதலான விலை கொடுத்து,​​ தனியார் வியாபாரிகள் சன்னரக நெல் முழுவதையும் அள்ளிச் செல்கிறார்கள் என்பதே உண்மை.ஆண்டுதோறும் ஜனவரி 15-ம் தேதிக்கு மேல் அரிசி விலை குறையத் தொடங்கும்.​ ஆனால் சந்தையில் சன்னரக அரிசி கிலோ ரூ.​ 32-க்கு கீழ் குறையவே இல்லை.​ இந்தியாவின் ஆண்டு அரிசித் தேவை 890 லட்சம் டன்.​ இதில் 2009-2010-ம் ஆண்டில் 70 லட்சம் டன் உற்பத்திக் குறைவால் பற்றாக்குறை என்றும்,​​ இந்த நிதி ஆண்டில் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்றும் மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.அரசு நெல் கொள்முதல் அளவு அதிகரித்தால்தான் அரிசி விலையேற்றத்தைக் கட்டுக்குள் வைத்து இருக்க முடியும்.ஆனால் சம்பா பருவத்தில் தனியார் வியாபாரிகள் சிறந்த ரக நெல் முழுவதையும் அள்ளிச் செல்வது பதுக்கல் மற்றும்,​​ விலை ஏற்றத்துக்குத்தான் வழிவகுக்கும் என்று நுகர்வோர் தெரிவிக்கிறார்கள்.விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் நெல் விற்பது ஏன்?​ என்று கேட்டதற்கு பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறியது:விலை கூடுதலாகக் கிடைக்கிறது.​ அரசு கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு செல்ல வாகன வசதி,​​ சாக்குகள் வேண்டும்.நன்றாக தூற்றி காய்ந்த நெல்லைத்தான் எடுப்பார்கள்.​ ஆனால் தனியார் வியாபாரிகள் களத்துக்கே சாக்குகளுடன் வந்து,​​ இயந்திரம் மூலம் அறுத்து,​​ நெல் ஈரமாக இருந்தாலும் எடுத்துக் கொள்கிறார்கள்.நெல் விளைவிக்க ஏக்கருக்கு ரூ.​ 18 ஆயிரம் செலவாகிறது.​ ஒரு ஏக்கரில் விளையும் நெல்லுக்கு பெரும்பாலும் அரசு கொள்முதல் நிலையங்களில் கிடைக்கும் விலை ரூ.​ 18 ஆயிரம்தான்.​ ஆனால் தனியார் வியாபாரிகளிடம் ரூ.​ 21,750 கிடைக்கிறது.​ அலைச்சலும் இல்லை.நெல் விலை குவிண்டாலுக்கு ரூ.​ 1,476 என அரசு நிர்ணயித்தால்தான் கட்டுப்படி ஆகும் என்றார் ரவீந்திரன்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment