இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

தன் சொந்த கல்லூரியில் கூட விஜயாந்த்தால் முதல்வராக முடியாது - நெப்போலியன்

தனது சொந்த கல்லூரியில் கூட விஜயகாந்த்தால் முதல்வராக முடியாது. தமிழகத்தின் அடுத்த முதல்வராக போவதாக கூறுவது நல்ல காமடி என மத்திய இணை அமைச்சரும், நடிகருமான நெப்போலியன் தெரிவித்துள்ளார்.

தேனியின் பொரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் அவர் பேசுகையில்,

பொதுவாக சினிமா நடிகர்களை பார்ப்பதற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் வரும். அதற்காகவே, பொது விஷேசங்களில் அவர்கள் கலந்து கொள்கையில் மக்கள் கூட்டம் அலைமோதும். இது யதார்த்தம். ஆனால் இது தனக்கு மட்டும் தான் இந்த கூட்டம் வருவதாக நினைத்துக்கொண்டு, தமிழகத்தில் அடுத்த முதல்வர் நானே என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறிவருகிறார்.

தே.மு.க 2005 ஆரம்பிக்கப்பட்டு, கடந்த சட்ட சபை தேர்தலில், 234 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியை பிடித்தது. வரும் சட்ட சபை தேர்தலில் நாங்கள், நான்கு அல்லது பத்து தொகுதியை பிடிப்போம் என பேசினால் அது ஏற்புடையதாகவும்.

z அதை விட்டு விட்டு தமிழகத்தில் அடுத்து நான் தான் முதல்வர் என பேசிவருவது உண்மையில் நல்ல காமடி தான். அவருடைய கல்லூரியிலேயே அவர் முதல்வராக முடியாது. ஏனென்றால் அதற்கும் கல்வித்தகமை வேண்டும். இவ்வாறு பேசினார் நெப்போலியன்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment