இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நீர்வள, நிலவள திட்டப் பணிகள் நெதர்லாந்து வேளாண் ஆய்வாளர்கள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் நீர்வள, நிலவளத் திட்டப் பணிகளையும், அதில் செம்மைநெல் சாகுபடியையும் நெதர்லாந்து நாட்டின் வேளாண் ஆராய்ச்சியாளர்கள் பார்வையிட்டனர்.

÷ஆராய்ச்சியாளர்கள் டொமினிக் க்ளோவர், எஸ்ரா பெர்க் ஆகியோர் ஆலம்பூண்டி, தென்பிலாய், கொணக்கம்பட்டு, வல்லம், செந்தூர், விக்கிரவாண்டி ஆகிய பகுதிகளுக்குச் சென்று திட்டப் பணிகளை பார்வையிட்டனர்

.÷விவசாயிகளிடம் திட்டப்பணிகள், அதன் பயன்கள் பற்றியும், அவர்களின் எதிர்பார்ப்பு, நிதிச் செலவு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தனர்.÷பின்னர் மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமியை சந்தித்து மேலும் விவரங்களை கேட்டறிந்தனர். மாவட்டத்தில் 69 ஆயிரம் ஹெக்டேர் மொத்த விவசாய நிலப்பரப்பில் 1.7 ஆயிரம் ஹெக்டேரில் தற்பொது செம்மை நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அடுத்துவரும் நெல்சாகுபடி பருவகாலத்தில் இன்னும் அதிக அளவிலான நிலப்பரப்பில் பயிரிட விவசாயிகள் தயாராக உள்ளனர் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

÷இந்த கலந்துரையாடலின்போது திண்டிவனம் விதை ஆராய்ச்சி மைய பேராசிரியர் ராமமூர்த்தி, வேளாண்மை இணை இயக்குநர் கே.அரங்கநாதன், நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சக்கரவர்த்தி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் எஸ்.அன்புமணி ஆகியோர் உடனிருந்தனர்.

நன்றி: தினமணி

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment