இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விதை உற்பத்தியில் தன்னிறைவு காண விதை கிராமத் திட்டம்: சி.வ.சு.ஜெகஜோதி

விதை உற்பத்தியில் தன்னிறைவு காணவும் அதன் மூலம் தனிநபர் வருமானத்தை அதிகரிக்கவும் ராமநாதபுரம் மாவட்டத்தில் விதை கிராமத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.





இதன் மூலம் மான்ய விலையில் சான்று விதைகள் விநியோகம், விதை உற்பத்திக்கான விவசாயிகள் பயிற்சி, மானிய விலையில் சேமிப்புக் கொள்கலன் விநியோகம் ஆகிய திட்டங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தின் 11 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படுகின்றன.





சான்று விதை விநியோகம் விவசாயத்தில் கூடுதல் மகசூல் பெற பயிர் எண்ணிக்கை பராமரிப்பு அவசியம். இதற்கு சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துல் முக்கியம்.விவசாயிகளோ பொருளாதார நெருக்கடியால் சான்று பெற்ற விதைகளை வாங்கி விதைக்க சிரமப்படுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு விதைக் கிராமம் மூலம் நெல், சிறுதானியம், பயறு சான்று விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விதை உற்பத்தி தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு விவசாயிகளின் வயல்களிலேயே தரமான விதைகளை உற்பத்தி செய்ய வேளாண் துறை

உதவுகிறது.





உற்பத்தி செய்யப்படும் விதைகளில் விவசாயிகள் தங்களுக்குத் தேவையானதை

வைத்துக் கொண்டு கிராமத்திலுள்ள இதர விவசாயிகளுக்கும் விற்பனை செய்து அதன் மூலம் கிராமம் முழுவதும் தரமான விதைகள் பயன்படுத்த இத்திட்டம் வழிவகுக்கிறது.



விதை உற்பத்தி பயிற்சி: விதை கிராமத் திட்டத்தை செயல்படுத்த கிராமங்களைத்

தேர்வு செய்து அக்கிராமத்தில் உள்ள 50 விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சி வழங்குவதுடன் விதை சான்றளிப்புத் துறை வல்லுநர்களாலும் இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 3 கட்டமாக வழங்கப்படுகிறது.





விதைசேமிப்பு கொள்கலன் விநியோகம்: எலி மற்றும் பூச்சிகளால் தானியங்கள் சேதாரமாகாமல் இருக்கவும் அதன் தராமல் கெடாமல் இருக்கவும் விதைகளை சேமித்து வைத்துக் கொள்ள விதை கொள்கலன்கள் இந்தத் திட்டம் மூலம்

மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.







இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ந.சத்தியமூர்த்தி

கூறியது:

விவசாயிகளுக்கு இத்திட்டம் ஒரு சிறந்த வரப்பிரசாதம். விதை உற்பத்திப் பயிற்சியை விவசாயிகளுக்கு வழங்குவதால் விதைத் தேர்வு, ரகத்தேர்வு, உரமிடுதல், பயிர் எண்ணிக்கை பராமரிப்பு சம்பந்தமான முதற்கட்ட பயிற்சியின் போது வழங்குகிறோம்.



பூச்சி, நோய்க் கட்டுப்பாடு, நீர் நிர்வாகம், களையெடுப்பு, கலவன் நீக்குதல் மற்றும் அறுவடை தொடர்பான பயிற்சியினை 2 வது கட்டமாகவும் தரமான விதைகளை பிரித்தெடுத்தல், விதை முளைப்புத்திறன் மற்றும் இனத்தூய்மை கண்டறிதல்,

விதை சேமிப்பு ஆகியவற்றை 3-வது கட்ட பயிற்சியிலும் வழங்குகிறோம்.





இந்தப் பயிற்சிகள் அனைத்தையும் மாவட்ட வேளாண் துறை சார்பில் அந்தந்த கிராமங்களிலேயே பயிற்சியை நடத்துவதால் விவசாயிகள் வயல்களில் நேரடியாகவே பயிற்சி பெறுகின்றனர்.





எனவே விவசாயிகள் விதை கிராமத் திட்டத்தில் மானிய விலையில் விதைகள் மற்றும் விதை சேமிப்புக் கொள்கலன்கள் வாங்கிப் பயன்பெறுவதோடு கிராம அளவிலான விதை உற்பத்திப் பயிற்சியிலும் கலந்து கொள்கின்றனர் என்றார்.



நன்றீ: தினமணி

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment