கர்நாடகத்தின் குரலை கருணாநிதி எதிரொலிக்கிறார்: தமிழக உழவர் முன்னணி
12:25 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
கர்நாடகத்தில் போதிய மழை பெய்தால்தான் தமிழகத்திற்குத் தண்ணீர் கிடைக்கும் என்ற கருணாநிதியின் பேச்சு கர்நாடகத்தின் குரலையே பிரதிபலிக்கிறது என்று தமிழக உழவர் முன்னணி ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதன் ஆலோசகர் கி.வெங்கட்ராமன் கூறியுள்ளார்.
சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழக உழவர் முன்னணி சார்பில் இன்று காலை நடந்த காவிரி ஆற்று நீர் உரிமைக் கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வெங்கட்ராமன் இவ்வாறு கூறினார்.
தமிழகத்தின் காவிரி ஆற்று நீர் உரிமையை மெல்லக் கொன்றுக் கொண்டிருக்கும் இந்திய, தமிழக அரசுகளைக் கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக உழவா முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் திரு. சி.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

FILE |
ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய, தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் திரு.கி.வெங்கட்ராமன் பேசியதாவது:
திராவிட நல்லிணக்கம் பேசி, காவிரி உரிமையை தமிழக முதலமைச்சர் கருணாநிதி கைகழுவிவிடுகிறார். இதுவரை கர்நாடக முதலமைச்சர்கள்தான் கர்நாடகாவில் மழை பொழிந்து அணைகள் நிரம்பினால் தமிழகத்திற்கு தண்ணீர் விடுவோம் என்று சொல்லி வந்துள்ளனர். ஆனால் இப்போது கோவையில் அண்மையில் பேசிய முதல்வர் கருணாநிதி கர்நாடகத்தில் போதிய மழை பொழிந்தால்தான் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று பேசியுள்ளார்.. இது கர்நாடகத்தின் குரலை எதிரொலிப்பதாகும்.
இடைக்காலத் தீர்ப்பு நடைமுறையில் இருப்பதாக தமிழக உழவர் முன்னணி கடந்த 3 ஆண்டுகளாக, இறுதித் தீர்ப்பு வந்த நாளில் இருந்து சொல்லி வந்தது. ஆனால், இப்போது தான் இதை கருணாநிதி கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த கால தாமதம் காவிரி பாசனப் பகுதியின் குறுவை சாகுபடியை கொன்று விட்டது.
இதே போக்கு நீடித்தால் உழவர்கள் வேளாண்மையை விட்டு ஒதுங்குவதோடு, தமிழகத்தில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலை வரும். அதனால், இப்போதே நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாட்டு உழவர்களின் குரலை எதிரொலித்த இவ்வார்ப்பாட்டத்தில், திரளான உழவர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.
நன்றி:தமிழ் வெப்டுனியா
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது