நாடு முழுவதும் இன்று பந்த்:டீசல் விலையுயர்வால் ரயில்களுக்கு இனி பயோடீசல்
7:06 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
இந்த விலையேற்றத்தினால் ரயில்வே துறைக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயில், தற்போது இயக்கப்படும் பயணிகள் ரயில்களில் 51 சதவீமும், சரக்கு ரயில்களில் 37 சதவீதமும் டீசலில் தான் ஓடுகின்றன. இந்த ரயில்களுக்காக, ஆண்டுதோறும் ரூ. 4,500 கோடி செலவில் 230 கோடி லிட்டர் டீசல் வாங்கப்படுகிறது. தற்போது, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளதால், ரயில்வேக்கு கூடுதலாக ரூ.460 கோடி செலவாகும் நிலை உருவாகி உள்ளது. இதை தவிர்ப்பதற்காக, மாற்று எரிபொருளான பயோ-டீசலை பயன்படுத்த ரயில்வே முடிவுசெய்துள்ளது. இதற்காக, பயோ டீசல் தயாரிக்கும் நிலையங்களை சொந்தமாக சென்னை உள்ளிட்ட இடங்களில் அமைக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக, டெண்டர் கோரப்பட்டுள்ளது. இது சம்பந்தமான பணிகள் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் முடிவடையும். பயோ டீசல் மூலம் ரயில்களை இயக்கும் திட்டம் உள்ளது. இதற்குத் தேவை சில தொழில்நுட்ப மாற்றங்கள், அவ்வளவே. எனவே இந்தத் திட்டம் நிரந்தர திட்டமாக எதிர்காலத்தில் இருக்கும். இனி ரயில்களுக்கு பயோ டீசலைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்வேயில் ஏற்படும் செலவீனம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது