இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நடப்பு நிதியாண்டில் ரூ. 40 ஆயிரம் கோடி பயிர்க் கடன் வழங்கவுள்ளதாக தேசிய வேளாண்மை மற்றும் கிராம வளர்ச்சி வங்கி (நபார்டு) அறிவித்துள்ளது.இது கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கடன் தொகையை விட 11 சதவீதம் அதிகமாகும்.இது குறித்து வங்கியின் தலைவர் யூ.சி. சாரங்கி தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) கூட்டத்தில் கூறியது:

2010-11 ம் நிதியாண்டில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள கடன் தொகைக்காக வங்கி ரூ. 8 ஆயிரம் கோடி வரை கடன் வாங்க வேண்டியுள்ளது. நடப்பு நிதியாண்டில் மறுபயிர் கடனாக ரூ. 40 ஆயிரம் கோடி வழங்க முடிவு செய்துள்ளோம். இவற்றில் ரூ.13 ஆயிரம் கோடி நீண்ட காலக் கடனாகவும், 26 ஆயிரம் கோடி குறுகியக் கால கடனாகவும் வழங்கப்படும்.

கடந்த ஆண்டில் இது ரூ.36 ஆயிரம் கோடியாக இருந்தது. இந்த நிதியாண்டில் ரூ. 8 ஆயிரம் கோடி வரை கடன் வாங்க வங்கி முடிவு செய்துள்ளது. கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் இந்தத் தொகை திரட்டப்படும்.வங்கியில் கடனுக்காக விண்ணப்பிக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. விவசாயத்துக்கு தொடக்கத்தில் அதிக முதலீடு தேவைப்படுகிறது.

விவசாயிகளின் தேவைகளை முடிந்த அளவுக்கு நபார்டு வங்கி நிறைவு செய்து வருகிறது. கடந்த ஆண்டில் சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நபார்டு வங்கியில் கடன்பெற்று பயனடைந்துள்ளனர்.விவசாயம் தவிர கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக ரூ.18 ஆயிரம் கோடியை பல்வேறு மாநிலங்களுக்கு நபார்டு வங்கி கடனாக அளித்துள்ளது என்றார் அவர்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment