இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பயிர்களுக்கு ஈடாக மரம் வளர்ப்பு: சத்தி விவசாயிகளிடம் மன மாற்றம்

சத்தி பகுதியில் பயிர்களுக்கு ஈடாக மரங்கள் வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

சத்தியில் கரும்பு, வாழை மற்றும் மல்லிகை பூக்கள் அதிகம் பயிரிடப்படுகிறது. தற்போது, சத்தி மலையை சுற்றியுள்ள பகுதிகளில் மரங்கள் வளர்க்க விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மரங்கள் வளர்ப்பால் சில ஆண்டுகளில் கணிசமான தொகையை எதிர்பார்க்கலாம் என விவசாயிகள் நம்பிக்கையில் உள்ளனர்.கெஞ்சனூர், பவானிசாகர், உப்புபள்ளம் பகுதியில் மலைவேம்பு, பாக்கு, பதிமுகம், குமிழ் ஆகிய மரங்கள் வருவாய்க்காக வளர்க்கப்படுகின்றன.


உப்புபள்ளம் விவசாயி ரவி கூறியதாவது: பதிமுகம் மரம் இயற்கை சாயம் தயாரிக்கவும், ஆயுர்வேத மருந்து தயாரிக்கவும் கேரள வியாபாரிகள் அதிகம் வாங்குகின்றனர். இந்த மரத்தில் இருந்து இதய நோய் சம்பந்தப்பட்ட மருந்து தயாரிக்கப்படுகிறது. ஏழாண்டுக்கு பிறகு இந்த மரங்கள் அதிகம் பயன்தரக்கூடியது. இப்பகுதியில் பல ஆண்டாக கரும்பு பயிரிடப்பட்டு வந்தது. தற்போது, மரங்கள் நடவு செய்துள்ளோம். குறைந்தளவு தண்ணீர் போதும். மரத்தின் கிளைகள், பட்டைகள் ஆகியவை கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். மரத்துக்கு உரமாக தென்னை மட்டை, ஓலை ஆகியவையே பயன்படுத்தப்படுகிறது.குமிழ் மரங்கள் ஆறு ஆண்டுக்கு பிறகு நல்ல பலன் தருகிறது. இந்த மரத்தில் இருந்துதான் பிளைவுட் தயாரிக்கப்படுகிறது. ஜன்னல், கதவு, பரண் தயாரிக்க இவை ஏற்றது. சத்தி வனப்பகுதியில் இதுபோன்ற மரங்களை நடவு செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


கீழபவானி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் நல்லசாமி கூறியதாவது:தமிழகத்தில் வளரும் மலைவேம்பு மரம் குறுகலாக இருக்கும். 20 ஆண்டு வரை பயன்தரக்கூடியது. அதன்பிறகு தானாகவே பட்டுப் போகும். வெள்ளாடுகள் மட்டுமே இதன் தழைகளை உண்கின்றன. மரத்தின் இலை, பூக்கள், கனி, பட்டை ஆகியவை மருத்துவ பயன் கொண்டவை. ஓரளவு வளர்ச்சி தாங்கி வளரக்கூடியது. வனப்பகுதியில் வேலி ஓரங்களிலும், வரப்புகளிலும் இம்மரம் வளர்க்கப்படுகிறது.மரம் ஓரளவு கடினமானது; நீடித்து உழைக்கும். கரையான் பூச்சி தாக்காது. நாற்காலி, மேஜை தயார் செய்ய இம்மரம் ஏற்றது.இவ்வாறு அவர் கூறினார்.


காலைக்கதிர்-சேலம்

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment