கொடைக்கானலில் தொடர் மழை கொய்மலர் ஏற்றுமதி பாதிப்பு
3:50 PM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
கொடைக்கானல் : கொடைக்கானலில் கொய்மலர்கள் நன்கு மகசூல் இருந்தும் தொடர் மழையால் ஏற்றுமதி செய்ய விவசாயிகள் தயங்குகின்றனர். கொடைக்கானல் மேல்மலை,கீழ்மலை பகுதியில் கொய் மலர்கள்( பொக்கே பூ) விவசாயம் செய்யப்படுகிறது.இங்கு விளையும் கார்னேஷன்,ஜெர்ப்பூரா பூக்கள் பெரிதாக இருப்பதால்,பெங்களூரு,மும்பை,டில்லி உட்பட வெளியிடங்களுக்கு தினமும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், வடமாநிலங்களில் பெய்யும் மழை காரணமாக மார்க்கெட்டில் பூக்களின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால்,விவசாயிகள் ஏற்றுமதி செய்ய தயங்குகின்றனர்.நல்ல வளர்ச்சி இருந்தும் பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர்.விவசாயி ராஜேந்திரன் கூறுகையில்,சீசன் இல்லாத நேரங்களில் அதிக பட்ச விலையாக ஒரு பூ 8 ரூபாய் வரை விற்பனையாகும்.மழை எதிரொலியால் தற்போது ஒரு பூ 3 ரூபாய் மட்டுமே விலை போகிறது.பூக்களை பதப்படுத்தி சந்தை நிலவரத்திற்குகேற்ப,விற்பனை செய்ய வசதியில்லாததால் செடியிலேயே பறிக்காமல் விட்டு விடுகிறோம்.எந்தாண்டும் இல்லாத அளவிற்கு செலவளித்த பணத்தை கூட எடுக்க முடியாமல் நஷ்டமே ஏற்பட்டுள்ளது' என்றார்.
நன்றி : தினமலர்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது