" உழவர் தின பேரணிவாகனங்களுக்கு வழிவிடுங்கள்' :விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்
3:48 PM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
இது குறித்து, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சிவசாமி கூறியதாவது:விவசாயிகள் போராட் டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஆண்டுதோறும் ஜூலை 5ம் தேதி நடந்து வரும் உழவர் தின பேரணி, இந்தாண்டு கோவையில் நடக்கிறது. கடந்த 34 ஆண்டுகளாக உழவர் தின பேரணி நடந்து வருகிறது. இந்நிலையில், அன்றைய தினம் பந்த் நடத்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன. எனவே, பேரணிக்கு வரும் வாகனங்களை அரசியல் கட்சிகள், தடுத்து நிறுத்த வேண்டாம் என தமிழக விவசாயிகள் சங்கம் விரும்புகிறது.இப்பேரணியில், கரும்பு டன்னுக்கு ரூ.3 ஆயிரம், தேசிய ஊரக வேலைவாய்ப்புதிட்டத்தை விவசாயத்துக்கு பயன்படுத்தல், கள் இறக்க அனுமதி, வனவிலங்கு பிரச்னைக்கு தீர்வு, உற்பத்தி செலவில் 30 சதவீதம் நேரடி மான்யம் மற்றும் நில ஆர்ஜிதம் உட்பட 18 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்படும். கடந்த ஐந்தாண்டுகளில், உணவு தானியங்கள், பருப்பு, எண்ணெய் வித்து, காய்கறி, பால், சர்க்கரை விலை உயரந்துள்ளது. இதனால், அத்தியாவசிய பண்டங்கள் பற்றாக்குறை ஏற்பட்டு விலைவாசி உயர்ந்துள்ளது.
விவசாய உற்பத்தியை பெருக்காமல் விலையை கட்டுப்படுத்த முடியாது. இதனால், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். பேரணியில், நில ஆர்ஜித பிரச்னைக்கு முக்கியத்துவம் வழங்கப்படும், பைபாஸ் திட்டங்களை கைவிட்டு, மெயின் ரோட்டை நான்குவழியாக்குதல், நில ஆர்ஜிதத்துக்கு 2 மடங்கு வெளிமார்க்கெட் விலை, பாரதியார் பல்கலை நில ஆர்ஜிதத்துக்கு உடனடியாக நீதிமன்ற தீர்ப்பின்படி இழப்பீடு வழங்குதல், 1984ம் ஆண்டு நில ஆர்ஜித சட்டத்தை திருத்தல், விமான நிலைய விஸ்தரிப்பு, ஹவுசிங் போர்டு நில ஆர்ஜித கோரிக்கைகளும் வலியுறுத்தப்படும். மேலும், டீசல், பெட்ரோல், காஸ் விலை உயர்வுக்கு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.மாலை 4.00 மணிக்கு வி.கே.கே., மேனன் ரோட்டில் பேரணி புறப்படும்; சிவானந்தா காலனியில் முடியும். அங்கு பொதுக்கூட்டமும் நடக்கும். நில ஆர்ஜித எதிர்ப்பு போராட்டம் தள்ளி வைக்கப்பட் டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது