இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

தலைமடை காலிங்கராயன் விவசாயிகள் சங்கம் துவக்கம்

ஈரோடு: "தலைமடை காலிங்கராயன் வாய்க்கால் பாசன விவசாயிகள் நலச்சங்கம்' என்ற அமைப்பு புதிதாக துவக்கப்பட்டுள்ளது. காலிங்கராயன் பாசனத்துக்கு சென்றாண்டு இரண்டாம் போகத்தில் தண்ணீர் அடைப்பு குறித்து இரு வேறு கருத்துக்கள் எழுந்தன. வாய்க்கால் மராமத்து பணி துவங்க வேண்டிய நிலையில், தலைமடை விவசாயிகள் கோரிக்கையை ஏற்று மீண்டும் ஏப்ரல் மாதம் வரை தண்ணீர் திறக்கப்பட்டது. அப்படியும், நெற்பயிருக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.


இப்பிரச்னை விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் எதிரொலித்தது. இதனிடையே, "தலைமடை காலிங்கராயன் வாய்க்கால் பாசன விவசாயிகள் நலச்சங்கம்' என்ற அமைப்பு ஈரோடு வைராபாளையத்தில் நேற்று முன்தினம் துவக்கப்பட்டது. காலிங்கராயன் வாய்க்காலில் 11 கோடி ரூபாய் செலவில் நடக்கும் தடுப்பு சுவர் கட்டுதல், பாலங்கள் அமைத்தல், கரைகளை சீரமைத்தல், மதகுகளை பழுதுபார்த்தல் போன்ற பணிகள் காலதாமதமின்றி சிறந்த முறையில் நடக்க விவசாயிகள் பிரதிநிதிகள் உள்ளடக்கிய கண்காணிப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும். பணிகøள் விரைந்து முடிக்க கலெக்டரை கேட்டுக்கொள்வது. விவசாய விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைக்கவும், இடைத்தரகர்கள் ஒழிக்கப்படவும், காலிங்கராயன் வாய்க்கால் பாசன தலைமடை பகுதியான ஈரோட்டில் தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.


விவசாய உற்பத்தியில் தற்போது கூலியாட்களுக்கு வழங்கப்படும் கூலி, எந்திரங்களுக்கான வாடகை, ரசாயன உரங்களின் விலை உயர்வு மற்றும் குறைவான விளைச்சல் போன்றவற்றால் சாகுபடி செலவு கூடுகிறது. ஒரு கிலோ நெல்லுக்கு 15 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். காலிங்கராயன் வாய்க்காலில் நடக்கும் திட்டப் பணிகள் முழுமையாக முடிவுற்ற பிறகே நடப்பு பருவத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். காலிங்கராயன் அணைக்கட்டில் பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு திடல் ஆகியவை உருவாக்க வேண்டும். காலிங்கராயன் வாய்க்கால் பாசன தலைமடை பகுதியில் உள்ள வாட்டர் ஆஃபீஸ் முதல் வெண்டிபாளையம் வரையிலான கரை பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சமூக விரோதிகளால் வழிப்பறி, திருட்டு மற்றும் பல சட்டவிரோதமான செயல்கள் நடக்கிறது. போலீஸார் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment