இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

திருநெல்வேலி-கீழப்பாவூர் வட்டாரத்தில் மா, நெல்லி தோட்டங்கள் அமைக்க அரசு மானியம்

கீழப்பாவூர் வட்டாரத்தில் மா, நெல்லி தோட்டங்கள் அமைக்க அரசு மானியம்

திருநெல்வேலி : கீழப்பாவூர் வட்டாரத்தில் மா, நெல்லி தோட்டங்கள் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது என கீழப்பாவூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கீழப்பாவூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கீழப்பாவூர் வட்டாரத்தில் நடப்பு நிதியாண்டில் தேசிய தோடக்கலை இயக்கத்தின் கீழ் 20 எக்டேர் பரப்பரளவில் மா பழமரக் கன்றுகள், 8 எக்டேர் பரப்பளவில் நெல்லிக் கன்றுகளும் நடவு செய்யப்படவுள்ளன. வீரிய ஒட்டு ரகக் கன்றுகள் அரசு தோட்டக்கலைப் பண்ணை மூலம் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.


இத்திட்டத்தில் சேரும் விவசாயிகளுக்கு 3 ஆண்டுகள் வரை கன்றுகள் பராமரிப்பு செய்திட அரசு மானியம் வழங்குகிறது. அதிகபட்சமாக நபர் ஒருவருக்கு 4 எக்டேர் வரை மானியம் வழங்கப்படுகிறது. எனவே கீழப்பாவூர் வட்டார மா, நெல்லி சாகுபடி செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் கீழப்பாவூர் வட்டார தோட்டக்கலை துணை வேளாண்மை அலுவலரையோ அல்லது தோட்டக்கலை உதவி வேளாண்மை அலுவலர்களையோ நேரில் அணுகி விபரங்கள் பெற்று பயன் பெறலாம். இவ்வாறு கீழப்பாவூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்: , , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment