இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

தேசிய வேளாண் காப்பீடு திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு அழைப்பு

நாமக்கல்: ""தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில், விவசாயிகள் சேர்ந்து பயன்பெறலாம்,'' என , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணபதி கூறினார். உழவர் பயிற்சி நிலையம் சார்பில், கிராம அடிப்படை பயிற்சி முகாம், சேந்தமங்கலம் யூனியன் துத்திக்குளத்தில் நடந்தது. பயிற்சி நிலைய வேளாண் உதவி இயக்குனர் சுப்ரமணியம், துவக்கி வைத்து மக்காச்சோள சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினார். சேந்தமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வருதராஜ், வேளாண் துறை திட்டப்பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

வேளாண் காப்பீட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணபதி பேசியதாவது: தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தின் கீழ், அனைத்து விதமான உணவுப்பயிர்கள், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் வருடாந்திர வணிக தோட்டக்கலை பயிர்கள் காப்பீடு செய்யப்படும். நெல், கேழ்வரகு, சோளம், கம்பு, கொள்ளு, நிலக்கடலை, எள், கரும்பு, பருத்தி, வெங்காயம், மிளகாய், மரவள்ளி, மஞ்சள், வாழை ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்யப்படும். அனைத்து விதமான இயற்கை சீற்றங்களால் ஏற்படும் மகசூல் இழப்புகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடு வழங்கப்படுகிறது. குத்தகைதாரர்கள் உட்பட அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் சேர்ந்த பயன் பெறலாம்.

ஒவ்வொரு தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரம் அல்லது பிர்காவில் வேளாண் துறையினர் பயிர் அறுவடை காலத்தில் ஆய்வு நடத்தி, நடப்பு பருவத்தின் சராசரி மகசூலை கடந்த மூன்று அல்லது 5 ஆண்டுகால உத்திரவாத மகசூலோடு ஒப்பிடும் போது, நடப்பு பருவத்தின் மகசூல் எவ்வளவு குறைத்திருக்கிறதோ அந்த விகிதப்படி அந்த வட்டாரத்தில் உள்ள காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் அவரவர் தொகைக்கு ஏற்ப நஷ்டஈடு வழங்கப்படும். எனவே, தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.

துணை வேளாண் அலுவலர் சிவராஜன், தோட்டக்கலை அலுவலர் மஞ்சுளா, நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் ஜெயக்குமார், வேளாண் வணிக அலுவலர் கென்னடி, விதைச்சான்று அலுவலர் சுரேஷ்குமார், கால்நடை உதவி மருத்துவர் டாகடர் முருகேசன், வனவர் வெங்கடாஜலம் ஆகியோர் துறைகள் பற்றி விளக்கினர். பயிற்சியில் பங்கேற்ற முன்னோடி விவசாயிகளுக்கு பஞ்சாயத்து தலைவர் வேதாம்பாள் ஊக்கத்தொகை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை வேளாண் அலுவலர் அன்புச்செல்வி, உதவி வேளாண் அலுவலர் சங்கர் ஆகியோர் செய்தனர்.

நன்றி: தினமலர்

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment