இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நாமக்கல்:உர இருப்பை அறிய கட்டுப்பாட்டு அறை

"உர இருப்புகளை விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில், உரக்கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது' என, நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) பிரபாகரன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில் தற்போது குறுவை நெல் மற்றும் இதர மானாவாரி பயிர்கள் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. சாகுபடி சய்யப்படும் பயிர்களின் தேவைக்கேற்ப உரங்களை தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைத்து விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளபபட்டுள்ளது.விவசாயிகளின் தேவைக்கேற்ப உரங்களை இருப்பு வைத்து விநியோகம் செய்யவும், அதை கண்காணிக்கவும் நாமக்கல் வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் உரக்கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. அக்கட்டுப்பாட்டு அறை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். உரம் சம்பந்தப்பட்ட புகார்கள் ஏதும் இருப்பின் அது குறித்து, தகவல்களை 04286-280465 என்ற ஃபோன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment