இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

தட்டை பயறு சாகுபடி விலை குறைவால் விவசாயிகள் கவலை

ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் தட்டை பயிர் சாகுபடி விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. அதிக விளைச்சல் காரணமாக தட்டை பயிர் விலை சற்று குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

கோபி, நம்பியூர் மற்றும் டி.என்.பாளையம் உள்ளிட்ட பகுதியில் சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வரும் கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், முள்ளங்கி, புடலை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சமீப காலமாக அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஆண்டு முழுவதும் தண்ணீர் வசதி கொண்ட கோபி பகுதியில் விளையும் தோட்டக்கலை பயிர்கள் நல்ல சுவையும், அதிக எடையும் கொண்டதாக விளங்குவதால், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உண்டு.பருவமழை தவறியதால், குறைந்த தண்ணீரே தேவைப்படும் தட்டை பயிர்களை கோபி பகுதியை சேர்ந்த விவசாயிகள் பயிரிட்டனர்.


தற்போது தட்டை பயிர் முற்றி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. கோபி, சிறுவலூர், குருமந்தூர், கடத்தூர், பொலவகாளிப்பாளையம், கள்ளிப்பட்டி, துறையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தட்டை பயிர் அறுவடை தொடங்கியுள்ளது. முற்றிய தட்டை பயிரை காயவைத்து, விற்பனை செய்ய சில மாதமாகும். ஆனால் கேரளாவில் முற்றாத இளம் தட்டை பயிர்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது.கேரளா மற்றும் தமிழகத்தில் முற்றாத இளம் தட்டை பயிர், பொரியலில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. உடனடியாக வருமானம் கிடைப்பதால், கோபி பகுதியை சேர்ந்த விவசாயிகள், தண்டுடன் கூடிய தட்டை பயிரை அறுவடை செய்து உடனடியாக விற்பனை செய்கின்றனர்.


கடந்த போகத்தில் ஒரு கிலோ தண்டுடன் கூடிய தட்டை பயிறு, 12 ரூபாய் வரை விற்றது.கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்பட்டுள்ள அதிக விளைச்சல் காரணமாக ஒரு கிலோ தட்டை பயிர் ஆறு ரூபாயாக குறைந்து விட்டது. இதனால் அதிக விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தட்டை பயிரை பயிரிட்ட கோபி பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment