இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

எலிப்பொறிக்குள் விவசாயமா? இல்லை கணிப்பொறிக்குள் விவசாயமா? உணருவது உங்கள் பொறுப்பு... என் உலக விவசாயி திட்டத்திற்கு உதவ நினைப்பது உங்கள் விருப்பு - சக்

வணக்கம்...
மின் தமிழ் ஊடகத்தில் சில நண்பர்கள்
இணைய மாநாட்டில் நீங்கள் பேச நினைத்த தகவலை எங்களோடு
பகிர்ந்து கொள்ளுங்களேன்.. என்றதைத் தொடர்ந்து இந்த மடல்..

உலக விவசாயி..

உணவினைப் பற்றி பேசுகிறோம்.. ஆனால்.. உணவினை உற்பத்தி செய்யும் உழவனை பலர் நினைத்துப் பார்த்தது இல்லை.. விவசாயம் மூலம் கிடைக்கும் உணவு வேண்டும். ஆனால்.. விவசாயி வேண்டாம் என்பது தான் இன்றைய நிலை.. ஆட்சியாளர்களின் நிலை.. இன்றைய ஆட்சியாளர்கள் என்று சொல்லவில்லை.. இது வரை இருந்தவர்கள்.. இன்று இருப்பவர்கள்... என்று எல்லோரையும் தான் இங்கே குறிப்பிடுகிறேன்..

நாங்கள் இலவச மின்சாரம் அளித்தோம் என்று தமிழகத்தின் பிரதான கட்சிகள் சொந்தம் கொண்டாடுகிறனர்.. அவர்கள் அளித்த இலவச மின்சாரத்தினை வைத்து என்ன செய்ய... உங்களுக்கும் உங்கள் மக்களுக்கும் உணவு உற்பத்தி செய்வதற்கு தானே தருகிறீர்கள்... அப்புறம் என்ன?

இந்த இலவசங்களும், மானியங்களும், கடன் தள்ளுபடிகளும் எப்படி இந்த உலகில் விவசாயியினை பொருளாதாரத்தில் உயர்த்தும்... நியாயமான விலை நிர்ணயிப்பதாகக் கூறி.. செலவுகளை கணக்கில் கொள்ளாமல்.. விலை நிர்ணயம் இது தானே இன்றளவில்...
விவசாயிகள் ஒன்றிணைந்து தங்கள் பொருட்களை விற்பனை செய்யமுடியாமல் செய்திருக்கும் சாதிக்கட்சி விவசாயமும்,அரசியலும் விவசாயிகளின் வாழ்வின் நலம் காக்க பேசுவதாக நடித்து விவசாயிகளின் ஒற்றுமையை சீர் குழைக்கின்றனர்.. இணையத் தமிழுக்கும் நான் எழுதும் (பேசும்) விசயங்களுக்கும் என்ன பொருத்தம் என்றும்? எழுதியது (பேசியது) போதும் என்று நீங்கள் நினைக்கத் தோன்றலாம்..

இணையம் மூலம் எத்தனையோ தொலைவுகள் மிக அருகில்...
ஏன் இந்த இணைய வளர்ச்சியினை விவசாயிகளுக்கு தகவல் சொல்ல அரசு அலுவலர்களுக்கு மட்டும் கற்றுத்தந்தால் போதுமா..?
அதன் மூலமாக எங்களால் எங்கள் பொருளை விற்பனை செய்ய முடியாதா?
விளம்பரப் படுத்திட முடியாதா..?
இந்த இடைத்தரகர்களாலும், உள்ளூர் வியாபாரிகளாலும் நாங்கள் என்றும் ஏமாற்றங்களைத் தான் சொந்தமாக்கி கொள்ளமுடியுமா..?
இது விபரம் தெரிந்த விவசாயிகளின் பேச்சு...

எங்களுக்கு சலுகை வேண்டாம்.... மானியம் வேண்டாம்...
எங்கள் உழைப்பு முதலீடு இவைகளைப் பார்த்து ஒரு சராசரி இலாபக் கணக்கீட்டில் விலை நிர்ணயம் செய்யலாமே... அல்லது... விலை நிர்ணயித்தினை அரசு மேற்கொள்ளாமல் இருக்கலாம்.. அல்லது எங்களை மக்களோடு இணைய வழியில் வியாபாரத்தில் இணைக்கலாமே... இது எல்லாம் முடியாதா? ஒரு ரூபாய்க்கு அரிசி அளிக்க முடியும் போது ...
எங்களின் மாடுப்பண்ணை மூலமான பால் உற்பத்திகளை சேகரித்து மறு விற்பனைக்கு தயார் படுத்தி விற்பனை செய்யும்போது ஏன் இவைகள் முடியாது..

விவசாயிகளின் கேள்விகள் தான் இவை... நான் சொல்லும் விவசாயிகள்.. அரசியல் சாராதவர்கள்.. விவசாயத்தின் மூலமான இலாபத்தினையும் வருமானத்தினையுமே எதிர் நோக்கும் விவசாயிகள்...

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் இணையத்திலும் தமிழ்...
இணையத்தில் தமிழில்.. கதைகளும் கட்டுரைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
சினிமா கவர்ச்சிப் படங்களை காட்சிப்படுத்தி... கிசு கிசுக்களை எழுதித் தான் இணையத்தில் தமிழ் வளர்க்க வேண்டும்... என்ற நிலையில் தமிழ் இணையம்.. இப்படி கிசுகிசு எழுதும் தமிழ் தளங்களின் சொந்தங்கள் தானே.. தமிழ் இணையத்திற்கு சொந்தம் கொண்டாடுகின்றனர்..
அவர்களின் உழைப்பு கணினி தமிழுக்கு இருந்திருக்கலாம்..
ஆனாலும் அவர்கள்.. சினிமா கிசுகிசு எழுதியா தமிழ் வளர்க்க வேண்டும்..

எந்த துறைக்காவது தமிழில் இணையத்தளம் இருக்கிறதா...?
அரசு துறைகள் அனைத்தும் தமிழ் தளங்கள் தான்... என்பீர்கள்..
அரசு தளங்கள்... அரசு ஆட்சி மாறும் போது புதிய முதல்வரின் புகைப்படத்தினை புதுப்பிப்பதோடு சரி...
அப்படியே.... தகவல்கள் இருக்கும் மாவட்ட அரசு தளங்களில்... தகவல் இருக்கின்றனவா... நிர்வாகம் குறித்தும், மாவட்ட விபரங்களுமே... இருக்கும்...

சிறு மாவட்டம் நாமக்கல்... அங்கே ஆட்சியர் அவர்கள்... இணையப் பயிலரங்கு நடத்தி கிராமங்களில் இணையம் மூலம் தொடர்பு களை ஏற்படுத்திட முனைகிறார்.. ஏன் இதனை மற்ற மாவட்டங்களில் செய்யவில்லை.. சரி விடுங்க... ஒன்றியத்திற்கு உட்பட்ட சில ஊராட்சிகளில் மக்கள் சேவை மையம் என்று கணினி வழி சேவை மையத்தினை அரசு தனியார் ஒப்பந்தம் மூலம் அமைத்தது...

கிராமத்தில் இருப்பவர்கள்... மின் மற்றும் தொலைப்பேசி கட்டணங்கள் செலுத்தலாம்.. பட்டா,சிட்டா விபரங்கள் பெறலாம்... என்பது இத்திட்டத்தின் நோக்கம்... ஆனால்... இன்று எத்தனை மக்கள் சேவை மையங்கள் சரிவர செயல்படுகின்றது.. உள்ளூர் வாசிகளுக்கு அளித்திருந்தால்.. இந்த திட்டம் பயன் அளித்திருக்கும்.. தொடந்து இயங்கி இருக்கும்... ஆனால்.. மாவட்ட அளவில் இருந்து தேர்ந்தெடுத்து மக்கள் சேவை மையம் அமைக்க தனி நபர்களுக்கு அனுமதி அளித்ததால்.. இன்று பல மையங்கள்... திறக்கப்படுவதே இல்லை..
இந்த கணினி வளர்ச்சியால் என்ன பயன்...

இந்த கணினி வளர்ச்சியினை வேளாண் மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் மாற்றிட வேண்டும்...
தமிழ் இணையம் என்றால்.. அங்கே இலக்கியங்களும் கட்டுரைகளும் கவிதைகளும் மட்டும் அல்ல..
கிராமம் முதல் விண்வெளி வரை, விவசாயம் முதல் விஞ்ஞானம் வரை தகவல்கள் கொட்டிக்கிடக்கும் என்ற நிலை அல்லவா.. வேண்டும்.. இணையத்தில் தொழில் நுட்பங்கள் மென்பொருட்களை தமிழில் வடிவமைப்பது மட்டும் தமிழ் இணைய சேவை அல்ல...

தமிழில் தளம் அமைத்து தகவல்களை பரிமாறிக்கொள்கிறார்களே... அவர்களின் செயலும் தமிழ் இணையத்திற்கு ஆற்றும் சேவைதான்...

சில ஆக்கப்பூர்வமான சிந்தனைகள்.. சிலருக்கு தவறு என்று படலாம்.. ஆனால்.. சில உண்மைகள் சிலருக்கு சுடும் என்பது பெரியோர்களின் கருத்து...

தமிழ் இலக்கியமும் சங்க காலமும் மட்டுமே தமிழ் பாரம்பரியம் கலை அல்ல... விவசாயம், நெசவு என பல இருக்கின்றது... ஆனால்.. இங்கே அவைகள் குறித்து காண முடியவில்லை என்பது விவசாயிகளின் பார்வையில் வருத்தமே...


இணையத்தில் விவசாயம் சார்ந்த தொழில்நுட்ப தகவல் இருக்கிறது,, இதனை எத்தனை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்... எதற்கு இந்த வீண் முயற்சி... என்று பேசிய வேளாண் அலுவலர்கள் அதிகம்...

அவர்கள் மட்டுமே மெத்தப் படைத்த வேளாண் விஞ்ஞானிகள் போல பேச்சு..
எங்களுக்கு விவசாயம் குறித்து கற்றுக் கொடுக்காதீர்கள்..
விற்பனைக்கு வழிகாட்டுங்கள்..
நாங்கள் உங்களுக்கு உற்பத்தி செய்து அளிக்கிறோம்...
என்பது தான் விவசாயிகளின் கருத்து... ஆனால்..
இதை யாரும் காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை..

எனவே தான் நாங்கள் புதிய முயற்சி எடுத்திருக்கிறோம்...
விவசாயிகளின் விபரங்களை இணையத்தில் ஏற்றுவது...
அவர்களிடம் எந்த காலத்தில் என்ன பொருள் எந்த அளவு உற்பத்தி செய்யப் பட்டு விற்பனைக்கு கிடைக்கிறது...
என்பது குறித்து புதுப்பிக்க முடிவு செய்துள்ளோம்..
இதன் மூலம்... விவசாயிகள் மற்றும் மக்களுக்கு இடையே ஒரு நேரடி வணிகத்தினை நியாயமான விலையில் ஏற்படுத்தித் தரமுடியும் என்று நம்புகிறோம்...


எந்த ஒரு விசயத்தினையும் அரசுதான் செய்ய வேண்டும் ,,, என்றில்லை... நல்ல விசயங்களை யார் வேண்டுமானாலும் பேசலாம்.. செயல்படுத்தலாம்..
இந்த திட்டத்தினை அரசு செய்ய வேண்டும் என்று கேட்கவில்லை..
சினிமா கிசு கிசு மூலம் தமிழ் இணையம் வளர்ப்பவர்களை செயல்படுத்தச் சொல்ல வில்லை...

விவசாயிகளோடு வாழும் விவசாயி மகனாக.. சராசரி கிராமத்தானாக... இந்த செயலினை நான் முன்னெடுத்து செயல்பாட்டிற்கான செயல்பாடுகளை மேற்கொள்கிறேன்,, என் இந்த முயற்சிக்கு துணையிருங்கள்... பல தொழில் நுட்ப மற்றும் இதற்கான உதவிகளை செய்யுங்கள்...

எங்கள் விவசாய குடும்பங்களை இந்த பாரினில்.. பாருங்கள்.. நாங்கள் செய்வது தொழில் தான்.. நாங்களும் பொருளாதாரத்தில் உயர்ந்திருக்கிறோம்.. என்று பெருமை பேச நினைக்கிறோம்...
இன்று விவசாயிகளும் மக்களும் ஒன்றிணைந்து இல்லை... இவர்களின் ஒருங்கிணைவு... இன்றைய இணைய உலகில் வலம் வரும் நம் தாய் மொழி தமிழால்... சாத்தியம் என்று நான் நம்புகிறேன்...

விவசாயம் சார்ந்த நான் ஒரு தளம் இயக்கி வருகிறேன்.. அதனை ஆரம்பித்து வழி நடத்தி செல்ல பல சிரமங்கள்.. மிக முக்கிய பிரச்சனை நிதி..
அதற்காக.. விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் விளம்பரம் கேட்டேன்...
அவர்கள் சொன்ன பதில்..
தமிழுக்கு, விவசாயத்திற்கு கிடைத்த அவமானமாய் உணர்ந்தேன்... ஆம்... தமிழ்ல பெருமைக்கு வெப்சைட் நடத்துற...
எந்த விவசாயி வந்து பார்க்க போறான் என்றார்கள்..
இன்று தமிழில் இணையதளம் நடத்துவது பெருமைக்கு செய்யும் வேலையாக நினைக்கின்றனர்.. தமிழில் இணையம் ஆரம்பிப்பது பெருமைதான்.. ஆனால்.. பெருமைக்காக என் வேளாண் தளம் அல்ல...

சரி என்ன நிதி பிரச்சனை எழுந்தாலும் யாரிடமும் சென்று விளம்பரம் கேட்பதில்லை.. அவர்களாகவே வரும் காலம் வரும் என்று காத்திருக்கிறேன்...
இங்கே நான் சொல்லும் விசயமும் இது தான்..
விவசாயிகளின் வாழ்க்கை பொருளாதார நிலை மேம்பட விவசாயிகள் மற்றும் மக்களுக்கு இடையேயான நேரடித் தொடர்பே சிறந்த ஒன்று.. இன்று பெரிய பெரிய நிறுவனங்களும் விவசாயத்தினை தொழிலாக செய்யும் நிலைக்கு வந்து விட்டனர்... சிறு விவசாயிகள்.. கடன் , இலாபம் இன்மை என்ற பிரச்சனைகளால்.. விவசாயத்தினை விட்டு .. இல்லை.. விவசாய நிலத்தினை விற்றுவிட்டு எட்டி நிற்கத் தொடங்கி விட்டனர்...


பெரும் நிறுவனங்களில் கையில் விவசாயம் முழுமையாக சிக்கிக் கொண்டால்.. எலிப் பொறிக்குள் சிக்கிய வடை போலத்தான் நமக்கு உணவு என்பது...

இந்த மிகச் சாதாரண சிந்தனையை சிந்தித்து பாருங்கள்..
விவசாயிகள் மற்றும் மக்கள் ஒருங்கிணைந்த வேளாண்மைக்கு வழி பிறக்கும்..
என் இந்த திட்டம் நான் எனும் ஒருவனால்.. மட்டுமே செய்ய இயலும் என்பது சாத்தியம் இல்லை...
இருந்தாலும் நான் முயன்று வருகிறேன்...
என் முயற்சியின் பலன் இன்று தமிழ் விவசாய தகவல் ஊடகத்தில் உறுப்பினர்களாய் 700 க்கும் மேற்பட்டோர்..
தமிழில் வடிவமைக்கப் பட்ட வேளாண்மைக்கான முதல் நிகழ்நிலை இணையம்..
இதனை ஆரம்பிக்க பலரிடம் உதவிகள் கேட்டேன்..
சிறு உதவி கூட கிடைக்க வில்லை..
சரி என்று கடன் வாங்கி கணினி வாங்கினேன்...
இணையத்தில் இருக்கும் தகவல்களை திரட்டி தொழில் நுட்பம் கற்றேன்.. தமிழில் வேளாண் தளம் அமைத்தேன்... இன்னும் விவசாய எண்ணங்களை முன்னெடுத்து சிறப்பாக செயல்படுத்திட நினைக்கிறேன்... அதற்காக கிராமங்கள் தோறும் தன்னார்வலர்களை தேடிக் கொண்டு இருக்கிறேன்... அது மட்டும் அல்ல... தன்னார்வலர்களுக்கு கணினி மற்றும் சிறு ஊக்கத் தொகையேனும் அளிக்க தன்னார்வ நிதி அளிப்போரினையும் தேடிக் கொண்டு இருக்கிறேன்...

கடன் வாங்கி வாங்குன கம்பியூடரை பணம் கட்டலனாலும் தூக்கிட்டு போகாத கடன் அளித்தவர்...
சுமார் 6 மாதங்கள் ஆகியும் கட்டணம் செலுத்த வில்லை என்று இணைய இணைப்பினை இதுவரை துண்டிக்காத பிஎஸ்என்எல் நிறுவனமுமே எனக்கு இப்போதைய உதவியாளர்கள்...
இந்த நேரத்தில் இவர்களுக்கு நன்றி சொல்வதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன்...

கார்பரேட் கைகளில் விவசாயமா? இல்லை தொடந்து விவசாயிகளின் கையில் விவசாயமா?
அதாவது..
எலிப்பொறிக்குள் விவசாயமா? இல்லை கணிப்பொறிக்குள் விவசாயமா? உணருவது உங்கள் பொறுப்பு... என் உலக விவசாயி திட்டத்திற்கு உதவ நினைப்பது உங்கள் விருப்பு...

நாங்கள் தொடருவோம்... உலகம் இனி உழவர்கள் கையில் ... என்ற வாசகத்தினை இணையத்தில் தாங்கி எங்கள் சேவைகளை....


***********************************************************************************************************************************************************************************************************
மேற்காணும் எண்ணங்கள் தான் நான் பேச நினைத்தது... நான் இதனை எழுதியோ.. தட்டச்சு செய்தோ வைக்கவில்லை... என் மனதில் இருக்கும் என் விவசாயம் சார்ந்த உரத்த சிந்தனைகளை ஒலிக்கச் செய்யவே நினைத்திருந்தேன்... பேசும் போது இன்னும் பல விளக்கங்கள் அளித்திக்க வாய்ப்பு உண்டு.. வரி வடிவம் என்பதால்.. உதாரணங்கள் இல்லை...


உலக விவசாயி குறித்து...

தமிழக விவசாயிகளின் விபரங்கள்..
விவசாய முறைகள்..
விளைபொருட்கள் விபரங்கள்...
உட்பட அனைத்து தகவல்களையும் தொடர்பு விபரங்களோடு.. அளிக்க முனைவது... தான்,.. உலக விவசாயி திட்டம்...
உங்களால் முடிந்த உதவிகள் செய்யுங்கள்>. முடிந்தால்,,உங்கள் கிராமத்தின் அல்லது உங்கள் அருகில் உள்ள கிராமத்தின் விவசாயிகளின் தகவல்களை சேகரித்து தரலாம்...
அதற்கான விண்ணப்பங்கள் தேவைப் படுவோர்... உங்கள் முகவரியினை அனுப்பினால்.. நான் அஞ்சல் மூலமாக படிவங்களை அனுப்புகிறேன்..

ஒரு நல்ல விவசாய உலகம் மலர்ந்திட உதவுங்கள்.. இந்த உலகம் நமக்காக படைக்கப் பட்டது,..

விவசாயிகள் மற்றும் மக்களின் ஒருங்கிணைப்பால் மட்டுமே.. நல்ல அரோக்கியமான சத்தான இயற்கை உணவுகளை உற்பத்தி செய்ய இயலும்...
அனைவரும் இணைவோம்... விவசாயிகள் என்ற போர்வையில் விளம்பர பிரியர்களையும் அரசியல் செய்யும் நபர்களையும் அடையாளம் காண்போம்..

இதுவரை நான் மட்டுமே... இனி இந்த மடல் மூலம் என் எண்ண சிந்தையில் ஒருங்கே இருக்கும் நண்பர்கள் இணைவார்கள் என்று நம்புகிறேன்...

700 பேரை நான் இணைத்தேன்...
நாம் எல்லாம் இணைந்தால்...
அனைவரையும் விவசாயம் எனும் சமூகத்தில் இணைக்க முடியும்.///


உங்களின் நேர் மறையான எதிர் மறையான கருத்துக்கள் யாவனவற்றையும் எதிர்பார்க்கிறேன்...


நான்... சக்திவேல்...

www.agriinfomedia.com

+91 99943 96096


இந்த உலகிற்கு கடவுள் யார் என்பது எம் பேச்சு அல்ல..
இந்த உலகில் கடவுள் உணவளிக்கும் விவசாயி என்பதே நம் பேச்சு..

பொது நலம் பற்றி சிந்தனை இல்லாதவர்கள்...
இந்த உலகில் நடக்கும் குற்றங்களுக்கு..
பங்காளி ...

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment