இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விவசாய துறை அதிகாரிகள் செய்துள்ள உர மோசடி - சிபிஐ விசாரணை

இந்த மோசடி பல வருடங்களாக நடை பெற்று வருவது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது

காரைக்காலில் 2009 வருடம் வெளிவந்த பல கோடி ரூபாய் உர மோசடியில் மாநில விவசாய துறை அதிகாரிகள் மற்றும் இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் (ஐபிஎல்) நிர்வாகம் ஈடுபட்டு இருப்பதை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். பொட்டாசியம் குளோரைட் என்ற அதிக மானியம்(சப்சிடி) உள்ள ரசாயனம் தீப்பெட்டி & பட்டாசு தொழிற்சாலைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது என்பதை விவசாய துறை வெளியிட்டது. இந்த விசாரணை சிபிஐ பொருளாதார மோசடி பிரிவுக்கு(EOW) மாற்றபட்டது. இந்த EOW பொட்டசியம் குளோரைட் பயன்படுத்தும் கம்பனிகள் 20 வருடங்களாக செயல்படுபவை என்றும் ஆகவே இந்த ஊழல் பல வருடங்களாக நடை பெற்று வருவதாகவும் தெரிவித்து உள்ளனர் .

பொட்டசியம் குளோரைட் இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்து ஐபிஎல் நிர்வாகத்தால் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த கம்பனி மத்திய விவசாய துறை அனுமதியின் பேரில் இதை செய்கின்றது. பின்னர் இது மானிய விலையில் ஏழை விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாய அமைச்சகம்

ஒரு மெட்ரிக் டன் ரூபாய்.4500 என்ற விலையில் விற்பனை செய்கிறது. ஆனால் அதன் சர்வதேச விலை ஒரு மெட்ரிக் டன் ரூ 30,000/ ஆகும். ஐபிஎல் நிர்வாகம் அரசிடம் மானிய பணத்தை பெற்றுக்கொண்டுள்ளது விவசாய அமைச்சகத்திடம் உழவர்களுக்கு உரத்தை விற்பனை செய்து விட்டதாக சான்று பெற்று உள்ளது .

விஷமிகள் இந்த ஏற்பாட்டில் நுழைந்து இந்த உரம் உழவர்களுக்கு செல்லாமல் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகள் இதனை பயன்படுத்த திசை மாற்றி உள்ளனர். விவசாய துறை அதிகாரிகள் மூலம் வட்டார அளவில் உர தேவையை கணக்கில் வைத்து தேவையான அளவு இறக்குமதி செய்ய படுகிறது. நாங்கள் சான்றளிக்கபெற்ற உர விற்பனையாளர் சப்ளை லிஸ்ட் சோதனை செய்த போது உழவர்களின் முகவரியை சோதனை செய்த போது உழவர்களின் முகவரிகள் போலியானவை என்று கண்டுபிடித்தோம் என்று ஒரு மூத்த சிபிஐ அதிகாரி கூறினார்.

ஐபிஎல் இன் பங்கும் சோதனைக்கு உள்ளாகி உள்ளது. அங்கே இறக்குமதி மற்றும் கையிருப்பு நிர்வாகத்தில் நடைமுறை சீர்கேடு செய்யபட்டுள்ளதாக குற்றம் சாட்டபட்டுள்ளது. இந்த ஊழல் மிக பகிரங்கமாக நடை பெற்று உள்ளது. தூத்துக்குடியில் இருந்து நேராக இந்த தொழிற்சாலைகளுக்கு உரம் சென்றுள்ளது. எந்த தொழிற்சாலையும் உரத்தை சட்டபூர்வமாக வாங்க வில்லை. எல்லா தொழிற்சாலைகளின் 10 வருட வாங்குதல் பதிவு எங்களிடம் உள்ளது. எந்த தொழிற்சாலையும் வெடிமருந்து மூல பொருள் எங்கிருந்து வாங்கபடுகிறது என்று உரிமம் வாங்கும் போது மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும். இந்த தொழிற்சாலைகள் அந்த விண்ணப்பத்தில் என்ன குறிபிட்டுள்ளன என்று தெரியவில்லை. எல்லா தொழிற்சாலைகளும் உழவர்களுக்கு செல்ல வேண்டிய உரத்தை பயன்படுத்தி உள்ளன.

சிபிஐ நான்கு தொழிற்சாலை இயக்குனர்களையும் உர முதன்மை முகவர்களையும் கைது செய்துள்ளது. பலர் கைது செய்ய முடியாத ஆணை (முன் ஜாமீன்) வாங்கி விட்டார்கள். 2008 ல் இது போன்ற மோசடியை அரசு கண்டு பிடித்துள்ளது, அப்போது 3,153 டன் பொட்டாஷ் சென்னை துறை முகத்தில் இருந்து காணாமல் போனது. சென்னையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கபட்டது. இந்த புகாரை சிபி-சிஐடி விசாரித்து வருகிறது.

உர மோசடி கும்பல்

அரசு இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் பொட்டசியம் குளோரைட் இறக்குமதி செய்து உழவர்களுக்கு அதிக மானிய விலையில் விற்க அனுமதி அளித்துள்ளது. தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைக்கு முக்கிய மூல பொருள் பொட்டசியம் குளோரைட். இதனை உற்பத்தி செய்யும் எந்த தொழிற்சாலையும் இந்தியாவில் இல்லை. குற்றம் சாட்டப்பட்டுள்ள எந்த தொழிற்சாலையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ததாக அல்லது உரிமம் பெற்ற விற்பனயாளர்களிடம் வாங்கியதாக ஆதாரம் இல்லை. எல்லோருமே மோசடியான முறையில் உரத்தை பயன்படுத்தி உள்ளனர். இது தமிழ் நாட்டில் 3 வது உர மோசடி ஆகும். முன்பு சீனா உரம் கடத்தபட்ட மோசடி நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


நன்றி:டைம்ஸ் ஒஃப் இந்தியா-K Praveen Kumar | TNN

தமிழில்: சர்மிளா தாமஸ்..

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment