விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் கூடுதல் நேரம் வழங்கக் கோரி மனு
6:23 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
அம்மனுவில் கூறியதாவது: எங்கள் பகுதியில் குறுவை சாகுபடிக்கு நாற்றுவிட்டு நடவுக்கு தயார் நிலையில் உள்ளோம். ஆனால், போதுமான நேரம் மும்முனை மின்சாரம் கிடைக்காததால் விவசாயம் செய்ய இயலவில்லை. எனவே, விவசாயத்துக்கு வீரமரசன்பேட்டை துணை மின்நிலையத்தில் இருந்து சித்திரக்குடி பிரிவு வழியாக எங்கள் பகுதிக்கு தற்போது ஏழு மணி நேரத்துக்கும் குறைவாக மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த நேரம் விவசாயத்துக்கு போதுமானதாக இல்லை.
பம்புசெட்கள் முழுமையாக இயங்கவும், நாற்று மற்றும் நடவு வயல்களை தயார் செய்யவும் 20 மணி நேரம் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். இப்போது, 20 மணி நேரம் மின்சாரம் வழங்கினால், நாற்று, நடவு, பயிர் விளைச்சல் ஒரு நிலைக்கு எட்டும் நிலையில் பருவமழையில் இருந்து தப்பி சிறந்த சாகுபடியை மேற்கொள்ள முடியும். மேட்டூர் அணை திறக்கப்படும்போது குறைந்த அளவு நீரை மட்டும் பயன்படுத்தும் சூழல் ஏற்படும். இதை விரைவாக செயல்படுத்த வேண்டும், என மனுவில் கோரினர்.

குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது