இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பாதிப்பு



தேவாரம் பகுதியில் விவசாய கூலி தொழிலா ளர்கள் பற்றாக்குறை காரணமாக காய்கறி சாகுபடி பரப்பு குறைந்து விட்டது. தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், புலிக்குத்தி, சிந்தலைச்சேரி, அய்யம்பட்டி பகுதியில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் காய்கறி சாகுபடி நடந்தது. இப்பகுதியில் விளையும் காய்கறிகளை விற்பனை செய்ய தேவாரத்தில் 40 கடைகள் உள்ள கமிஷன் மண்டி செயல் படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் காய்கறி சாகுபடி பரப்பை குறைத்து விட்டனர். இதனால் மார்க் கெட்டிற்கு வரும் காய்கறி அளவு 20 சதவீதமாக குறைந்து விட்டது. இதனால் பெரும்பாலான கடைகள் விற்பனையின்றி உள்ளன. கமிஷன் கடைக்காரர்கள் கூறியதாவது; விவசாய பணியாளர்களின் கூலி உயர்வு காரணமாகவும், தட்டுப்பாடு காரணமாகவும் பெரும்பாலான விவசாயிகள் கப்பைக்கிழங்கு, தென்னை சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.


தேவாரம் பகுதி முழுக்க கப்பை கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. அய்யம்பட்டி, சிந்தலைச்சேரி பகுதியில் மட்டும் காய்கறி சாகுபடி நடக்கிறது. சீசன் நேரத்தில் நாளொன்றுக்கு 2 லட்சம் கிலோவிற்கு மேல் இருந்த காய்கறி வரத்து தற்போது சில ஆயிரம் கிலோவாக குறைந்து விட்டது. இந்த தொழிலை நம்பியுள்ள நூறுக்கும் மேற்பட்ட குடும் பத்தினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றனர்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment