இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கொப்பரை மையம் செஞ்சேரியில் திறப்பு : பல்லடத்தில் விவசாயிகள் தவிப்பு

திருப்பூர்: கொப்பரை கொள்முதல் மையம் செஞ்சேரியில் மீண்டும் துவக்கப்பட் டுள்ளது; பல்லடத்தில் இன்னும் துவங்கப்படாமல் உள்ளதால், கொப்பரை உற்பத்தி விவசாயிகள் தவிப்படைகின்றனர்.

தென்னை விவசாயிகளை நசிவில் இருந்து காப்பாற்றும் நோக்கத்துடன், மத்திய, மாநில அரசுகள் இணைந்து கூட்டுறவு சொசைட்டி மூலம் விவசாயிகளிடம் இருந்து ஆண்டுதோறும் கொப்பரைகள் கொள்முதல் செய்கின்றன. கடந்த மார்ச் 23ம்தேதியுடன் பல்லடம், செஞ்சேரியில் உள்ள அரசு கொள்முதல் மையங்களில் கொப்பரை கொள்முதல் நிறுத்தம் செய்யப்பட்டது. இருப்பு வைக்க போதிய கிடங்கு வசதி இல்லாததால், ஏப்ரலில் மீண்டும் துவங்க வேண்டிய கொள் முதல் துவங்கவில்லை. இந்நிலையில், செஞ்சேரியில் உள்ள கொள்முதல் நிலையத்தில் ஒரு கிலோ 44.50 ரூபாய்க்கு சில நாட் களுக்கு முன் கொப்பரை கொள்முதல் துவங்கியது.

பல்லடம் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படும் கொப்பரைகளை இருப்பு வைக்க, இட வசதி இல்லாததால் பல்லடத்தில் கொப்பரை கொள் முதல் இன்னும் துவங்கவில்லை. செஞ்சேரி கொள் முதல் மையம் செயல்பட துவங்கியுள்ள நிலையில், பல்லடத்தில் கொள்முதல் துவங்காதது பல்லடம் பகுதி விவசாயிகளை தவிப் படையச் செய்துள்ளது. இதற்கு காரணம், வெளிமார்க்கெட் கொப்பரை கொள்முதல் விலை கிலோ 34 ரூபாய், அரசு கொள்முதல் மையத்தில் ஒரு கிலோ கொப்பரை கொள்முதல் விலை 44.50 ரூபாய்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment