கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் கட்டணம் குறைந்தது
9:35 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்வதற்கு கட்டணம் ரூ. 15ல் இருந்து ரூ. 10 ஆக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் கால்நடைத்துறை மூலம் கால்நடைகளுக்கு பல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாடுகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் செய்ய (சினை ஊசி போடுவதற்கு) கட்டணமாக ரூ. 15 வசூலிக்கப்பட்டு வந்தது. கால்நடை வளர்ப்போர்களின் நலன் கருதி, அந்த கட்டணத்தை ரூ.10 ஆக குறைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு கடந்த 1ம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.
மாதந்தோறும் 20 ஆயிரம்...
வேலூர் மாவட்டத்தில் 2009-10ம் ஆண்டில் 2 லட்சத்து 47 ஆயிரம் கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் ஊசிகள் போடப்பட்டுள்ளது. சராசரியாக மாதத்திற்கு 20 ஆயிரம் கால்நடைகளுக்கு கருவூட்டல் ஊசிகள் போடப்படுகின்றன. வேலூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்கள், கிளைகளில் 87 டாக்டர்கள், கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். நாய்களுக்கு கு.க அறுவைசிகிச்சை செய்ய ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கால்நடை மருத்துவமனைகளுக்கு வரும் கால்நடைகளுக்கு நோய் அதிகமாக இருந்தால், தொடர்சிகிச்சைக்கு கட்டணமாக ரூ. 10 பெறப்பட்டு வருகிறது. என கால்நடை இணை இயக்குனர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது