கடந்த கால விவசாய முறையை கைவிட்டு நவீன தொழில்நுட்பங்களை கையாளணும் : வேலூர் மாவட்ட இணை பதிவாளர்
9:36 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
விவசாயிகள் தங்களது நிலத்தில் கடந்த கால விவசாய முறைகளை கையாளாமல், நவீன தொழில்நுட்பங்களை கையாள வேண்டும் என்று கூட்டுறவுத்துறை மாவட்ட இணை பதிவாளர் வேண்டுகோள் விடுத்தார்.செய்யாறு தாலுகா, ஆலத் தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடனுதவிகள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, வங்கி செயலாளர் கோபால் தலை மை வகித்தார். முன்னாள் தலைவர் புரு÷ஷாத்தமன் முன்னிலை வகித்தார்.விழாவில், மாற்றுத் திறனாளிகள் 26 பேருக்கு சிறுவணிக கடனாக 25 ஆயிரம் ரூபாய் வீதம் 6 லட்சத்து 50 ஆயிரம், விவசாய கூட்டுப்பொறுப்பு குழுக்களுக்கு மத்திய கால கடனாக 6 லட்சத்து 33 ஆயிரம், சுழல் நிதிக்கடனாக 6 மகளிர் குழுக்களுக்கு தலா 50 ஆயிரம் வீதம் 3 லட்சம் ரூபாய் வழங்கி மாவட்ட இணை பதிவாளர் சுப்பிரமணி பேசியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயத்துக்கான போதிய மழை இல்லை. இப்படியொரு நிலை இருந்தாலும் விவசாயம் செய்வதற்கான ஆட்களும் இல்லை. மாவட்ட கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயத்தை மேம்படுத்துவதற்கான பல நிலைகளில் விவசாயிகளுக்கு உதவிகளை செய்து கொடுக்கிறோம். விவசாயிகள் இதை பயன்படுத்திக் கொண்டால் விவசாயத்தின் மூலம் அதிக லாபம் பெறலாம். கடந்த ஆண்டுகளில் கூட்டுக்குழுவில் கடனுதவி பெற்றவர்கள், அந்த கடனை திருப்பி செலுத்தி இருந்தால் அந்த குழுவினர் மீண்டும் கடன் பெறலாம்.
மாற்றுத் திறனாளிகள் பெறும் கடன்களை 36 மாதங்களில் செலுத்தி நிறைவு செய்தவர்கள் மீண்டும் கடன் பெறக்கூடிய வசதிகள் உள்ளன.விவசாயிகளுக்கு, அடமானம் இல்லாமல் பயிர் கடனும் வழங்கப்படுகிறது. நிலத்தில் சொட்டுநீர் பாசன முறையை அமைத்து அதன் மூலம் தண்ணீரை மிச்சப்படுத்தி, மேலும் அதிகமாக பயிர் செய்யலாம். இன்று ஆலத்தூர் வங்கியின் மூலம் 15 லட்சத்து 83 ஆயிரம் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களை போல் விவசாயம் செய்தால், விவசாயிகளுக்கு நஷ்டம்தான் வரும். இப்போதைய நவீன தொழில்நுட்பங்களை அறிந்து, கூட்டுறவுத்துறையின் மூலம் தரும் தரமான விதைகளை தேர்வு செய்து, செம்மை நெல் சாகுபடி முறைகளை பின்பற்றினால் அதிக மகசூல் கிடைக்கும். விவசாயத்தை நம்பிக்கையுடன், தொழில்நுட்ப உதவியுடன் செய்ய வேண்டும். கடன் பெற்றவர்கள் திருப்பி செலுத்தினால் நீங்களும் வளர்வீர்கள். வங்கியும் வளரும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் கள மேலாளர் கிருஷ்ணசாமி உட்பட பலர் கலந்து கொண்டார்
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது