இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

வேலை உறுதி திட்டத்தில் மாற்றம் வருமா; விவசாயிகள் எதிர்பார்ப்பு

Front page news and headlines today

தேசிய ஊரக வேலை உறுதி திட் டத்தால், விவசாயமும், மில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 'வேலை உறுதி திட்ட பணிக்கு வரும் தொழிலாளர்களை தோட்ட வேலைக்கு அனுப்ப வேண்டும்' என, தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், 2008 முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. இயந்திரங்களை பயன்படுத்தாமல் வளர்ச்சி பணி முழுவதும் தொழிலாளரை கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன. குளம், குட்டை தூர் வாருதல், கால்வாய் அமைத்தல், சாலை அமைத்தல் ஆகிய பணிகள் செய்யப்படுகின்றன. தினக்கூலி 100 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், செய்யும் வேலைக்கேற்ப சம்பளம் நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் விவசாயம் மற்றும் ஸ்பின்னிங் மில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி எழுந்துள்ளது.


உழவர் உழைப்பாளர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியம் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்த இத்திட்டம் தொழில் வளர்ச்சி குறைவான, வேலைவாய்ப்பு இல்லாத மாவட்ட மக்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பல ஆயிரம் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மில்கள் மற்றும் தொழிற்சாலைகளில் அதிக சம்பளம் கிடைப்பதால், ஏற்கனவே விவசாய பணிகளுக்கு தொழிலாளர் கிடைக்காமல் அவதிப்படுகிறோம். இத்திட்டத்தில் 100 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதால், விவசாய பணிகளுக்கு தொழிலாளர் வராததால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் முடிக்கப்பட்ட பணிகளையும், தொழிலாளர்களின் வருகைப்பதிவேட்டையும் தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில், இதன் காரணமாக, பல ஊராட்சிகளில் சரிவர வளர்ச்சிப் பணிகள் நடப்பதில்லை. ஏற்கனவே போடப்பட்ட ரோட்டை மீண்டும் தோண்டி சீரமைக்கின்றனர். தேவையில்லாத இடங்களில் 'வெட்டி வேலை' செய்கின்றனர்.


கஷ்டமில்லாத வேலை என்பதால், விவசாய வேலைக்கு வந்து கொண்டிருந்த பெண்கள், முதியோர் உள்ளிட்ட பல ஆயிரம் பேர், இப்போது வேலை உறுதி திட்ட வேலைக்கு மாறிவிட்டனர். இதனால் தோட்டங்களில் விதை விதைக்க, களை எடுக்க, தண்ணீர் பாய்ச்ச, அறுவடை செய்ய, சந்தைக்கு கொண்டு செல்ல என எதற்கும் ஆட்கள் கிடைப்பதில்லை. விளைந்த மஞ்சளை தோண்டி எடுத்து வேகவைத்து, பாலீஷ் செய்ய ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் சென்று ஆட்களை அழைத்து வருகின்றனர். இத்திட்டம் தொடர்ந்தால் விவசாயமே செய்ய முடியாத நிலை ஏற்படும். அரசு, இத்திட்டத்தில் வேலைக்கு வருவோரை அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய் யும்படி முறைப்படுத்த வேண்டும். இதனால், விவசாயத்திற்கும் போதிய ஆட்கள் கிடைப்பர். அரசுக்கும், செலவிடும் நிதி மிச்சமாகும். இவ்வாறு, பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.


இதுகுறித்து, ஸ்பின்னிங் மில் அதிபர்கள் கூறியதாவது: மில்களில் தினசரி சம்பளமாக 150 முதல் 170 ரூபாய் வரை தரப்படுகிறது. தொழிலாளர்களின் வீட்டுக்கே வாகனங்களை அனுப்பி அழைத்து வருகிறோம். ஆனால், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கஷ்டமில்லாத வேலையில் தினமும் 100 ரூபாய் கிடைப்பதால் மில் வேலைக்கு வந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இப்போது வேலை விட்டு நின்று விட்டனர். இதனால் மில்களை முழுமையாக இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர் பற்றாக்குறையால் 10 முதல் 20 சதவீத மெஷின்களை இயக்காமல் வைத்துள்ளோம். தமிழக அரசு, இத்திட்டத்திற்கு வேலைக்கு வருபவர்களில் தகுதியுள்ளவர்களை மில் வேலைக்கு அனுப்புவதன் மூலம் மில்களும் முழுமையாக இயங்கும். அரசுக்கும் நிதி மிச்சமாகும். தொழிலாளர்களுக் கும் கூடுதல் சம்பளம் கிடைக்கும். இவ்வாறு, மில் அதிபர்கள் தெரிவித்தனர்.


-dinamalar

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment