இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

ஏறுமுகத்தில் விதை மஞ்சள் விலை விவசாயிகள் மகிழ்ச்சி

பொங்கலூர் : மஞ்சள் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுவதால், விதை மஞ்சளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. பொங்கலூர் சுற்றுவட் டார பகுதியில், பி.ஏ.பி., பாசனம் பெறும் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதை பயன்படுத்தி மஞ்சள் சாகுபடி செய்ய நிலத்தை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். வைகாசி பட்டம் மஞ்சள் சாகுபடிக்கு ஏற் றது என்பதால், விவசாயிகள் விதை மஞ்சளை வாங்க ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக, விதை மஞ்சளுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.


இரண்டு மாதங்களுக்கு முன், ஒரு குவிண்டால் மஞ்சள் விலை 10 ஆயிரம் ரூபாயாக இருந்தது. பின், படிப் படியாக உயர்ந்து தற்போது 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென் றாண்டு மஞ்சள் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40 குவிண்டால் மகசூல் கிடைத்தது. ஏக்கருக்கு அதிகபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகிறது. தற் போதைய விலை உயர் வால், செலவு போக ஏக் கருக்கு நான்கரை லட்சம் ரூபாய் வரை நிகர லாபம் கிடைத்துள்ளது.


இத னால், அதிகமான பரப் பளவில் மஞ்சள் பயிர் செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். மஞ்சள் சாகுபடி செய் யும் பரப்பை விவசாயிகள் அதிகரித்துள்ளதால், விதை மஞ்சளுக்கான தேவையும் கடந் தாண்டை விட இந் தாண்டு கூடியுள்ளது. கடந்த மாத துவக்கத்தில், விதை மஞ்சள் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், 100 கிலோ கொண்ட ஒரு அண்டா மஞ்சள் 3000 ரூபாய்க்கும் விற்பனையானது. தற்போதைய நிலவரப் படி ஒரு கிலோ 40 ரூபாயாகவும், ஒரு அண்டா மஞ்சள் 4000 ரூபாயாகவும் விலை அதிகரித்துள்ளது.


dinamalar

keywords: turmeric price,tamilnadu turmeric,erode turmeric,karur turmeric,agri product market price,tamil agri news,market news,farmer news,farming news, tamil news,matrimony

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment