இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி நாளை முதல் (மே 17) பால் உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக்

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி நாளை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப் போவதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சங்க மாநிலத் தலைவர் செங்கோட்டுவேல், பொதுச் செயலாளர் எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் நேற்று சேலத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,

வறட்சியை கருத்தில் கொண்டு கூட்டுறவு சங்கத்துக்கு வரும் பாலுக்கு ஊக்க விலையாக லிட்டருக்கு ரூ.2 வழங்க வேண்டும், பசும்பால்- எருமைப்பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தவேண்டும், மானிய விலையில் தீவனம் வழங்கவேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு பல கடிதம் எழுதியும் அரசு அதை ஏற்கவில்லை. சட்டமன்ற மானிய கோரிக்கையிலும் பால் உற்பத்தியாளர்கள் நிலைமை குறித்து பதில் அளிக்கப்படவில்லை.

எனவே, எங்களது சங்கத்தின் சார்பில் ஏற்கனவே அறிவித்தபடி பால் உற்பத்தி நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் திங்கட்கிழமை தொடங்குகிறது. இந்த போராட்டம் காலவரையின்றி நடத்தப்படும் என்றனர்


keywords: milk , milk producers, milk pruducers strike, tamilnadu milk producers association, tamilnadu agriculture news, Tamil news, Farming news,Tamilnadu farmers Strike

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment