இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பி.ஏ.பி., வாய்க்காலில் குளங்களுக்கு தண்ணீர்: ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை

திருப்பூர் : "குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க பி.ஏ.பி., பாசன கால முடிவில் கிராம குளங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்', என ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களுக்கு அம்பராம்பாளையம் மற்றும் தாமரைப்பாடி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.


கோடை காலம் துவங்கியதிலிருந்து இப்பகுதியில் போதுமான அளவு மழை பெய்யவில்லை. இதனால், உள்ளூர் நீராதாரங்களான போர்வெல் மற்றும் பொதுக்கிணறுகள் வறண்டு காணப்படுகின்றன. அனைத்து தேவைகளுக்கும் கூட்டுக்குடிநீர் திட்டத்தை எதிர்பார்ப்பதால் பற்றாக்குறை பல மடங்கு அதிகரிக்கிறது. தென்மேற்கு பருவமழையும் தாமதித்து வருவதால் குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள குளங்கள், தடுப்பணைகள் நீர் வரத்து இல்லாமல் காய்ந்து கிடக்கிறது. கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த பி.ஏ.பி., வாய்க்கால் மூலம் குளங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இது குறித்து ஊராட்சி தலைவர்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், தற்போது குடிமங்கலம் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. உள்ளூர் நீராதாரங்கள் வற்றியுள்ளதால் குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்படுகிறது. இப்பகுதியில் பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்திற்கு கிளை வாய்க்காலில் தண்ணீர் செல்கிறது. விவசாயிகள் பாசன சங்க நிர்வாகிகள்,பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒப்புதல் அடிப்படையில் குளங்களுக்கு பாசன கால இறுதியில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குளங்களில் தண்ணீர் நிரப்புவதால் சில மாதங்களுக்கு உள்ளூர் நீராதாரங்களுக்கு நீர் வரத்து கிடைக்கும். இதனால், குடிநீர் தட்டுப்பாடு பல மடங்கு குறையும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment