இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

காரட் விவசாயத்தில் லாபம்: கோத்தகிரி விவசாயிகள் யுக்தி

காரட் விவசாயத்தில் லாபம் பெறும் வழிமுறையை, கோத்தகிரி சுற்றுவட்டார விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். கோத்தகிரி சுள்ளிகூடு, கேர்கம்பை, மிளிதேன், நெடுகுளா, வ.உ.சி., நகர் மற்றும் கூக்கல்தொரை உட்பட பகுதிகளில் மலைக் காய்கறிகளான காரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் குடைமிளகாய் உட்பட விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது;


பெரும்பாலான நிலப்பரப்பில் காரட் பயிர் செய்யப்படுகிறது. தேயிலை விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், போதியளவு கடன் பெற்றே காய்கறி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். தோட்டத்தில் விளையும் காரட்டை மேட்டுப்பாளையம் மண்டிகளில் விற்பனை செய்ய, தொழிலாளர்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, வாடகை வாகனம், மண்டி கமிஷன் என விவசாயிகள் கணிசமான தொகையை செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. இதைத் தவிர்க்க, பல இடங்களில், அறுவடைக்கு தயாராக இருக்கும் தோட்டத்தையை சில நாட்களுக்கு குத்தகைக்கு விடுகின்றனர்.


காரட் பயிரிடுபவர்களுக்கு பணிச்சுமை குறையும் நிலையில், கணிசமான லாபம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் காரட் உட்பட மலைக்காய்கறி விவசாயத்தை ஊக்குவிக்க, விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து உட்பட இடுப்பொருட்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment