விழுப்புரம் பகுதியில் இரவு-பகலாக மணல் கொள்ளை : விவசாயம் பாதிப்பு
6:59 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin

விழுப்புரம் :விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றில் இரவு- பகலாக மணல் எடுத்து வருவதால் நிலத் தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் புறநகர் பகுதியையொட்டி 10 கிலோ மீட்டர் தூரத்தில் தென் பெண்ணையாறு செல்கிறது. இதனால் விழுப்புரம் சுற்றியுள்ள கிராமப் பகுதியில் ஓரளவிற்கு விவசாயம் நடந்து வருகிறது.எல்லிஸ் அணைக்கட் டுப் பகுதி துவங்கி ஏனாதிமங்கலம், கரடிப்பாக்கம், குச்சிப்பாளையம், பேரங் கியூர், மரகதபுரம், பிடாகம், அத்தியூர், சித்தாத்தூர் என சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பரவலாக பயிர் செய்து வருகின்றனர்.ஆண்டுதோறும் பருவ மழையின் போது தென் பெண்ணையாற்றில் தண் ணீர் ஓடுவதால் இதன் மூலம் நிலத்தடி நீரை தக்க வைத்து விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இங்கு கரடிப்பாக்கம், மாரங்கியூர், பிடாகம், எனதிரிமங்கலம் பகுதிகளில் நீண்ட காலமாக குவாரிகள் மூலம் அதிகமாக மணல் எடுக்கப்பட்டு வந்ததால் நிலத்தடி நீர் மட்டம் படிப் படியாக பாதிக்கப்பட்டது.
விவசாயிகள் புகார் செய்ததையொட்டி பிடாகம், மாரங்கியூர் பகுதி மணல் குவாரிகள் மூடப் பட்டது. இதனால் பிடாகம் சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் ஓரளவிற்கு பாதுகாக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து பிடாகம் அருகே அத்தியூர் பகுதியிலும், எதிர்புறத் தில் பேரங்கியூர் பகுதியிலும் உள்ளூர் பிரமுகர்கள் சிலரது ஆதரவில் லாரிகளில் மணல் கொள்ளை நடப்பதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இதனிடையே சமீபத்தில் அத்தியூர் திருவாதி பகுதியில் அரசு மணல் குவாரி துவக்கப்பட்டுள்ளது.பகல் நேரங்களில் அரசு மணல் குவாரியாகவும், இரவு நேரங்களில் கணக் கின்றி லாரிகளில் மணல் ஏற்றிச் செல்வதுமாக மணல் கொள்ளை அமோகமாக நடந்து வருகிறது. வரைமுறையின்றி தொடரும் இந்த மணல் அள்ளும் சம்பவத்தால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அரசு குவாரியில் இரண்டு யூனிட் மணல் 630 ரூபாய் என்பதை கூடுதலாக உள்ளூர் லாரிகளுக்கு 1200ம், வெளியூர் லாரிகளுக்கு 2400 ரூபாயும் வசூலித்து மணல் கொள்ளை அமோகமாக நடந்து வருகிறது. திருக்கோவிலூர், கண்டரக்கோட்டை பகுதிகளில் குவாரிகள் மூடப் பட்டதால் சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிகளவில் லாரிகள் இங்கே அணி வகுப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.விழுப்புரம் பகுதியில் தென்பெண்ணையாற்றுப் பகுதியில் தான் ஓரளவிற்கு விவசாயம் நடந்து வருகிறது.
தண்ணீர் பிரச்னையால் நெல், கரும்பு பயிர் களை தவிர்த்து தோட்டப் பயிர்களை செய்து வருகின்றனர். பிடாகத்தைச் சுற்றியுள்ள பகுதியில் ஆற் றில் அதிகளவில் மணல் எடுக்கப்பட்டு வருவதால் நிலத்தடி நீர் குறைந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மணல் குவாரிகளை முறைப் படுத்திடவும், அதிகரித்துவரும் மணல் கொள் ளையை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
dinamalar

குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது