பீன்ஸ், கத்தரிக்காய் விலை சரிந்தது
5:53 PM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
திருப்பூர் மார்க்கெட்டில் பீன்ஸ் மற்றும் கத்தரிக்காய் விலை குறைந்துள்ளது; கோஸ், முருங்கை விலை உயர்ந்துள்ளது. தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு, வழக்கத்தை விட, முருங்கை காய் நேற்று குறைவாக வந்திருந்தது. சீசன் முடியும் தருவாயில் இருப்பதால் விலை அதிகரித்துள்ளது; ஒரு கட்டுக்கு 15 ரூபாய் வரை விலை அதிகரித்து, 25 எண்ணிக்கை கொண்ட கட்டு 35 ரூபாய் வரை விற்பனையானது. வடக்கு உழவர் சந்தை அதிகாரி ராமலிங்கம் கூறியதாவது: கத்தரிக்காய் வரத்து அதிகரித்து, விலை குறையத் துவங்கியுள்ளது. உழவர் சந்தைக்கு வழக்கமாக 2,500 கிலோ கத்தரிக்காய் வரத்திருக்கும்; 4,000 கிலோவாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 24 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக குறைந்துள்ளது. தொடர்ந்து வரத்து அதிகரித்தால், அதற்கேற்றவாறு விலை குறையும்; ஊட்டி பீன்ஸ் 45 ரூபாயில் இருந்து 10 ரூபாய் குறைந்து 35க்கு விற்பனையாகிறது. குண்டு மிளகாய் வரத்து முற்றிலும் நின்றுவிட்டது; முட்டைகோஸ் கிலோவுக்கு ஆறு ரூபாய் அதிகரித்து 18 ரூபாய். தக்காளி கிலோ 15 ரூபாய்; வெண்டை 20; புடலை 18; பாகல் 20 முதல் 24 வரை; பீர்க்கன்காய் 24; சுரைக்காய் 8; அரசாணி மற்றும் பூசணி 10; கொத்தவரை 16; பச்சை மிளகாய் சம்பா 34; அவரை 45; முள்ளங்கி 14; தேங்காய் 10; வாழைக்காய் 18; கீரை வகைகள் 15; கொத்தமல்லி 30; கரிவேப்பிலை 30; பெரிய வெங்காயம் 10; சின்ன வெங்காயம் 8 முதல் 15 வரை.
உருளை 14; கேரட் 35; பீட்ரூட் 18; சேனை 18; முருங்கை 15; பீன்ஸ் 35; காலிபிளவர் 12; இஞ்சி 30 முதல் 60 வரை; பூண்டு 60 முதல் 80 வரை; வாழைப்பழம் 15 முதல் 20 வரை; எலுமிச்சை 60; புளி 40; இளநீர் 8 முதல் 10; சப்போட்டா 16; பொறியல் தட்டை 16; மாங்காய் 20 முதல் 22 வரை; மரவள்ளி 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, என்றார்.

குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது