இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கோடை மழையால் சின்ன வெங்காயம் சிதைந்தது: அறுவடை நேரத்தில் ஆபத்து

அறுவடை தருணத்தில் பெய்த மழையால் சின்னவெங்காயம் விளைநிலத்திலேயே அழுகி வீணாகி வருகிறது. இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் பி.ஏ.பி., மற்றும் கிணற்றுப்பாசனத்திற்கு சின்னவெங்காயம் பிப்ரவரி மாதத்தில் பயிரிடப்பட்டது. நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டதிலிருந்து மழை இல்லாமல் கடுமையான வெயில் கொளுத்தியது. இதனால், வெங்காய பயிர்களில் இலைகருகல் உட்பட பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்பட்டது. வறட்சி காரணமாக பயிர்களுக்கு கூடுதலாக மருந்து மற்றும் ரத்தை விவசாயிகள் பயன்படுத்தினர். இடுபொருள் செலவு அதிகரித்த நிலையில், போதிய அளவு விளைச்சல் கிடைக்காத நிலை இருந்தது. கடந்த மாத இறுதியில் துவங்க வேண்டிய அறுவடை பணிகள் விவசாய தொழிலாளர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டது. வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு செல்ல தொழிலாளர்கள் ஆர்வம் காட்டியதால் பிற மாவட்டங்களிலிருந்து ஆட்களை அழைத்து வர விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். உடுமலை பகுதியில் சில நாட்களாக கோடை மழை பெய்ய துவங்கியது. விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியது. சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். அதிகப்படியான ஈரத்தால் அறுவடை செய்யப்படாமல் வெங்காயம் விளைநிலத்திலேயே அழுக துவங்கியுள்ளது. குறைந்த விளைச்சலால் சாகுபடியில் பல ஆயிரம் ரூபாய் நஷ்டத்தை எதிர்பார்த்திருந்த விவசாயிகளுக்கு மழையால் வெங்காயம் அழுகி வருவது வேதனையை அதிகரித்துள்ளது.


பெதப்பம்பட்டி, வெள்ளியம்பாளையம், சுங்காரமுடக்கு, புக்குளம் உட்பட பல்வேறு பகுதிகளில் பல ஏக்கர் பரப்பில் வெங்காயம் அழுகியுள்ளது. விவசாயிகள் கூறியதாவது: விதை வெங்காயம் தட்டுப்பாடு, இடுபொருள் செலவு, தொழிலாளர் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளால் சாகுபடி செலவு ஏக்கருக்கு 50 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் மோசமான பருவநிலையால் பயிர்கள் முழுமையாக வளரவில்லை. அறுவடை தருணத்தில் மழை பெய்துள்ளதால் வெங்காயத்தை அறுவடை செய்ய முடியாமல் விளைநிலத்திலேயே அழுகியுள்ளது. ஏக்கருக்கு சராசரியாக 3 டன் வரை வெங்காயம் அழுகி வீணாகியுள்ளது. தண்ணீர் தேங்காத பகுதியில் விளைந்துள்ள வெங்காயமும் தரமில்லாமல், இருப்பு வைக்க முடியாத நிலையில் உள்ளது. கொள்முதல் விலையும் குறைந்துள்ளதால் ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது', இவ்வாறு தெரிவித்தனர்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment