தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திóல் விவசாய பணிகளையும் இணைக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை
1:36 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திóல் விவசாய பணிகளையும் இணைக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மாநில செயற்குழு கூட்டம், மாநில தலைவர் கே.சி.ரத்தினசாமி தலைமையில் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: விவசாயத்திற்கு தற்போது வழங்கப்படும் 9 மணி நேர மும்முனை மின்சாரத்தை தடையில்லாமல் வழங்கவேண்டும். கோடை காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மின்தடை அதிகரித்துவருகிறது. மிóன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்களை அரசு விரைந்து செயல்படுத்தவேண்டும். விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், மரபணு மாறறம் செய்யப்பட்ட விதைகளின் விற்பனைக்கு நிரந்தர தடை விதிக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கையெடுக்கவேண்டும். நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்களை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கையெடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் ஒருங்கிணைந்து, மாசுபடுத்தும் ஆலைகளை மூடுவது. அண்மையில் அறிவிக்கப்பட்டுóள்ள கரும்புக்கான விலை உயர்வு கடந்த 2009-2010 அரவை பருவத்தில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கியுள்ள விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் முன்தேதியிட்டு வழங்கவேண்டும். தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் விவசாய பணிகளையும் இணைத்துக்கொள்வதன் மூலம், விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படாது. மத்திய, மாநில அரசுகள் பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பு, தொழில்துறையினரை அழைத்து கருத்துகேட்பது போன்று, விவசாய சங்கங்களின் பிரநிதிகளிடமும் கருத்துகேட்க வேண்டும். மாநில பொதுச்செயலர் ஈ.வரதராஜன், பொருளாளர் என்ஆர்.நஞ்சுகுட்டிகவுண்டர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது