இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

மருந்து தட்டுப்பாட்டால் கால்நடை முகாம் நடத்த தாமதம்! கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரி ஒப்புதல்


''மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, அனைத்து ஒன்றியங்களிலும் 'சர்வே' நடத்தப்படுகிறது. பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக, 50 சதவீத மானியத்தில் பூச்சிக்கொல்லி மருந்து வழங்கப்படுகிறது,'' என வேளாண் துறை உதவி இயக்குனர் தெரிவித்தார். திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது; கலெக்டர் சமயமூர்த்தி தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., முரளிதரன், வேளாண் துறை இணை இயக்குனர் முத்துச்சாமி, கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடந்த கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனு மீதான விசாரணை: மனு: பொங்கலூர் பகுதியில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைத்து முறைப்படுத்தப்படுமா?
இணை பதிவாளர் ராமமூர்த்தி: 2010-11ம் ஆண்டில் இருந்து முறையாக செயல்படும்; அதற்கான அனுமதி அரசிடம் ருந்து பெறப்படும். மனு: சின்ன வெங்காயம் விளைச்சல் விபரம் தேவை. வேளாண் துறை அதிகாரி: திருப்பூர், பொங்கலூர், குடிமங்கலம், மடத்துக்குளம், குண்டடம் பகுதிகளில், 2,500 எக்டர் சின்ன வெங்காயமும், 500 எக்டர் பெரிய வெங்காயமும் பயிரிடப்படு கிறது. சின்ன வெங்காயம், 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டன் விளைகிறது; பெரிய வெங்காயம் 17 ஆயிரத்து 500 டன் முதல் 30 ஆயிரம் டன் விளைகிறது. கலெக்டர்: பொங்கலூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் குளிர் பதன கிடங்கு அமைக்கப்படுகிறது. அதில், 3,300 டன் வரை இருப்பு வைக்க முடியும். மனு: தேங்காய் மற்றும் சின்னவெங்காயம் ஏற்றுமதி செய்ய முடியுமா? கலெக்டர்: சின்னவெங்காயம், தேங்காய் கடந்த 1985ம் ஆண்டு
களில் ஏற்றுமதி செய்யப்பட்டது. விலை மாற்றம் ஏற்பட்டதால், ஏற்றுமதி கைவிடப்பட்டது. உள்நாட்டில் அதிகமாக விளையும் போது ஏற்றுமதி செய்தால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். தேங்காயம் அதிகம் விளையும் கேரளா மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் ஆய்வு செய்து, தேங்காய் கொப்பரை வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டும்.
மனு: பொங்கலூர் பகுதியில் செந்நாய் கடித்து ஆடுகள் இறந்ததற்கு நஷ்ட ஈடு கிடைக்கவில்லை. மாவட்ட முதன்மை வங்கி மேலாளர்: அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களில், கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் செய்தால், இதுபோன்ற சம்பங்களில் இழப்பீடு பெற ஏதுவாக இருக்கும். மனு: பயிர்க்கடன் மூன்று வகையாக வழங்கப்படுகிறது. உரத்தட்டுப்பாடு ஏற்படும் போது, அதற்கான தொகை கிடைப்பதில்லை. எனவே, உரத்தட்டுப்பாடு ஏற்பட்டால் ரொக்கமாக வழங்க வேண்டும். மாவட்ட முதன்மை வங்கி மேலாளர்: வங்கிகளில் அவ்வாறுதான் கொடுக்கப்படுகிறது. கூட்டுறவு சங்கங்களில் மட்டும் ரொக்கமாக கொடுப்பதில்லை. அடுத்து வரும் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்து ஆவன செய்யப்படும். மனு: கால்நடை தடுப்பூசி முகாம் முறையாக நடத்தப்படுவதில்லை. தேவையான சமயங்களில் கட்டாயம் நடத்த வேண்டும். கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரி: கடந்த பிப்., மாதத்தில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டதால், முகாம் சற்று தாமதமாகியது. கோடை வெப்பத்தை சமாளிக்க, ஏப்., - மே மாதங்களில் முகாம் நடத்தப்படும். அதற்காக, கால்நடை மருந்துகள், 3.50 லட்சம் 'டோஸ்' பெறப்பட்டுள்ளது. மனு: மாவு பூச்சி தாக்குதலை சமாளிக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பயனளிக்கிறதா? திருப்பூர் வேளாண் துறை உதவி இயக்குனர் ஷெரீப்: அவிநாசி ஒன்றியத்தில் சர்வே நடத்தி, 25 முதல் 50 சதவீத மானியத்தில் 'அசோஸ்பைரில்லம்' மருந்து வழங்கப்படுகிறது. இதேபோல், அனைத்து ஒன்றியங்களிலும் சர்வே துவங்கியுள்ளது. ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு முறையில், இதற்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது, என்றார். முன்னதாக, குண்டடம் ஒன்றியத்தில் 'அக்ரி கிளீனிக்' அமைத்துள்ளவருக்கான உதவித்தொகையை கலெக்டர் வழங்கினார்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment