இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்

எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று, கோவை வேளாண் பல்கலை. துணைவேந்தர் ப.முருகேச பூபதி கூறினார்.கோவை வேளாண் பல்கலை.யில் தேசிய அளவிலான எண்ணெய் வித்து பயிர்கள் குறித்து வருடாந்திர கலந்தாய்வுக் கூட்டம், வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தை துவக்கி வைத்து, ப.முருகேச பூபதி பேசியது:கடந்த 1970}ம் ஆண்டு, மக்களின் சமையல் எண்ணெய் தேவையை வெளிநாடுகள்தான் பூர்த்தி செய்தன. கோவை வேளாண் பல்கலை. மற்றும் பிற ஆராய்ச்சி நிறுவனங்களின் கடும் முயற்சியால், எண்ணெய் வித்துகளின் உற்பத்தி அதிகரித்தது.தற்போது, இந்தியாவில் 7.37 மெட்ரிக் டன் அளவில்தான் எண்ணெய் வித்துகள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், மொத்த தேவை 11.58 மெட்ரிக் டன்னாக உள்ளது. இதன் காரணமாக, 40 சதவீத சமையல் எண்ணெய் தேவையை இறக்குமதிதான் நிறைவு செய்கிறது.அதிகரிக்கும் மக்கள்தொகையும், மக்களின் வாங்கும் சக்தி உயர்வும் சமையல் எண்ணெய் தேவையை கூடுதலாக்கி வருகிறது. எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அதனால், அதிக மகசூலை கொடுக்கும் புதிய ரக எண்ணெய் வித்து பயிர்களை விஞ்ஞானிகள் கண்டறிய வேண்டும், என்றார்.இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் உதவி தலைமை இயக்குநர் வி.டி.பட்டேல். ஹைதராபாத் எண்ணெய் வித்துகள் ஆராய்ச்சி இயக்குநக திட்ட இயக்குநர் டி.எம்.ஹெக்டே, பல்கலை. ஆராய்ச்சி இயக்குநர் எம்.பரமாத்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment