விளைநிலங்களை விற்காதீர்கள்:விவசாயிகளுக்கு வைகோ யோசனை
1:30 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
''விளைநிலங்கள் குறைந்து வருவதால் இன்னும் சில ஆண்டுகளில் நாட்டில் பஞ்சம் வரப்போகிறது. அப்போது நிலத்தின் மதிப்பு 100 மடங்கு அதிகரிக்கும். எனவே, தற்போது கிடைக்கும் சொற்ப விலைக்காக நிலங்களை விற்று விடாதீர்கள்,'' என ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசினார்.திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை உட்பட பல கிராமங்களில் ம.தி.மு.க., கட்சிக் கொடியேற்றி வைகோ பேசியதாவது:முல்லைப் பெரியாறு அணையை கேரள அரசு எந்நேரமும் உடைக்க திட்டமிட்டு வருகிறது. அணை உடைக்கப்பட்டால் தமிழகத்தில் ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரிய ஆபத்தாகும்.
இதை தடுக்கவே ம.தி.மு.க., கேரள அரசை கண்டித்து மே மாதம் 28ம் தேதி அறப்போராட்டம் நடத்துகிறது.கிராமத்தில் விவசாயம் செய்வது வேதனையாக உள்ளது. வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. விளைப்பொருளுக்கு கட்டுபடியான விலை இல்லை. தற்போது கிராமப்புற இளைஞர்களுக்கு விவசாய வேலையே தெரியாமல் உள்ளது. விளைநிலங்கள் குறைந்து வருவதால் இன்னும் சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் பஞ்சம் வரப் போகிறது. அப்போது நிலத்தின் மதிப்பு 100 மடங்கு அதிகரிக்கும். எனவே, தற்போது கிடைக்கும் சொற்ப விலைக்காக நிலங்களை விற்று விடாதீர்கள்.இவ்வாறு வைகோ பேசினார்.
நன்றி: தினமலர்
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது