இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

அமோக விளைச்சல்: ​கத்தரிக்காய் விலை சரிவு


கடலூர் அருகே நாணமேடு கிராமத்தில் கத்தரிக்காய் பறிக்கும் விவசாயிகள். படம்: வி.சிவபாலன்.
​ கட​லூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு கத்தரிக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது.​ இதனால் சந்தையில் விலை சரியத் தொடங்கி இருக்கிறது.தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.​ எனினும் தர்மபுரி,​​ கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகமாகக் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறது.பொதுவாக கத்தரிக்காய் டிசம்பர்-ஜனவரி,​​ மே-ஜூன்,​​ அக்டோபர்-​ நவம்பர் என 3 பட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.​ நட்டு 40 நாள்களில் அறுவடைக்கு வரும்.​ அடுத்து 110 நாள்கள் வரை பலன் கொடுக்கும்.கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி,​​ அண்ணா கிராமம் மற்றும் கடலூர் வட்டங்களில் சுமார் ஆயிரம் ஏக்கரில் கத்தரிக்காய் பயிரிடப்பட்டு உள்ளது.​ கடலூர் வட்டத்தில் உள்ள நாணமேடு சுபஉப்பளவாடி,​​ கண்டக்காடு உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்படும் கத்தரிக்காய்,​​ நாணமேடு கத்தரிக்காய் என்று அழைக்கப்படுகிறது.​ இங்கு கிடைக்கும் கதரிக்காய் மண் வளம் காரணமாக அளவில் பெரிதாகவும் அதிக சுவையாகவும் இருப்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.கடலூர் மாவட்டத்தில் தற்போது கத்தரிக்காய் அறுவடை அமோகமாக உள்ளது.​ இதுகுறித்து நாணமேடு விவசாயி மணவாளன் கூறுகையில்,​​ ""கடலூர் பகுதியில் செவந்தம்பட்டி கத்தரி,​​ மற்றும் நாட்டுக் கத்தரி அதிக அளவில் பயிரிடப்படுகிறது.​ இதில் செவந்தம்பட்டி கத்தரி,​​ ஏக்கருக்கு 25 மூட்டை ​(60 கிலோ)​ வரை மகசூல் கிடைக்கிறது.கத்தரிக்காய் அறுவடை தொடங்கி 40 நாள்கள் ஆகிவிட்டது.​ தொடக்கத்தில் கிலோ ரூ.​ 20 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தார்கள்.​ தற்போது கிலோ ரூ.​ 7-க்கு வாங்குகிறார்கள்.​ இதைவிட விலை குறைந்தால் விவசாயிகளுக்குக் கட்டுப்படி ஆகாது.​ கடலூர் பகுதியில் கத்தரி சாகுபடியில் ஏக்கருக்கு ரூ.​ 50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்'' என்றார்.கடலூர் காய்கறி அங்காடிகளில் ஒரு மாதத்துக்கு முன்புவரை,​​ கத்தரிக்காய் விலை கிலோவுக்கு ரூ.​ 30 ஆக உயர்ந்து இருந்தது.​ தற்போது கிலோ ரூ.​ 10 முதல் ரூ.​ 12 வரை விற்பனை செய்யப் படுகிறது.​ காய்றிகள் விலை சற்று ஏறுமுகமாக உள்ளது என்றும் காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர்.கத்தரி சாகுபடி குறித்து தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநர் ராமலிங்கம் தெரிவித்தது:​ கத்தரி சாகுபடியில் விவசாயிகள் நல்ல லாபம்பெற முடியும்.​ துல்லிய கத்தரி சாகுபடி முறையில் விவசாயிகள் தற்போதைய லாபத்தை இரட்டிப்பாக்க முடியும்.​ இதற்காக விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம்.கட்டியங்குப்பம் கிராமத்தில்,​​ துல்லிய கத்தரி விவசாயம் செய்ய பயிற்சி அளித்து இருக்கிறோம்.​ சொட்டு நீர் பாசனம் செய்தால் சாதாரணமாக பயன்படுத்தும் தண்ணீரைக் கொண்டு 3 மடங்கு சாகுபடி செய்ய முடியும்.​ மின்சார வெட்டு நேரத்தில்,​​ துல்லிய விவசாயம் அதிக பயனுள்ளதாக இருக்கும்.​ பூச்சி தாக்குதல் குறைவாக இருக்கும்.விவசாயிகள் உரிய லாபம்பெற இடைத்தரகர்கள் பிடியில் இருந்து விடுபட வேண்டும்.​ விவசாயிகள் தற்போதைய சூழ்நிலையில்,​​ விவசாய முறைகளை மட்டுமன்றி சரியான சந்தைப் படுத்துதலையும் தெரிந்திருக்க வேண்டும்.​ இதற்காக விவசாயிகளுக்கு விளைபொருள்களைச் சந்தைப்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கிறோம்.​ தற்போதைய சூழ்நிலையில் சுயஉதவிக் குழுக்கள் அமைத்து விவசாய விளைபொருள்களை விற்பனை செய்தால்,​​ விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் என்றார் ராமலிங்கம்.

நன்றி: தினமணி

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment