பி.ஏ.பி., பாசனத்தில் தண்ணீர் இல்லை: பாதி வளர்ந்த நிலக்கடலையால் தவிப்பு
10:37 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
இக்கால்வாய், அர்த்தநாரிபாளையம் பகுதி வரையுள்ள 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேலுள்ள நிலங் களுக்கு பாசன வசதி அளிக்கிறது. முதலாம் மண்டல பாசனம் துவங்கியதில் இருந்து கிளை கால்வாயில் முறையான நீர் நிர்வாகம் இல்லாததால், நிலக் கடலைக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் கருகும் நிலை ஏற்பட்டது. இப்பகுதியில் பெய்த மழையால் சாகுபடியில் பாதி விளைச்சல் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது, பயிர்கள் அறுவடை தருணத்தில் உள்ளது.கோடை வெப்பத்தால் நிலக்கடலை பயிரிடப் பட்டுள்ள நிலப்பரப்பு முழுவதும் தற்போது இறுகியுள்ளது. விளைநிலங்களில் தண்ணீர் பாய்ச்சிய பிறகே, நிலக்கடலையை அறுவடை செய்ய வேண்டிய நிலையுள்ளது. பி.ஏ.பி., பாசன சுற்றில் குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடாததால், அரைகுறையாக விளைந்த நிலக்கடலையையும் அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆண்டியூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது: பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்தை நம்பி மேற்கொள்ளப்பட்ட அனைத்து சாகுபடிகளும் வீணாகியுள்ளன. பாசன காலம் முழுவதும் தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. வளர்ச்சி மற்றும் காய்ப்பு பருவத்தில் பாசன தண்ணீர் கிடைக்காததால், ஏக்கருக்கு 20 மூட்டை கிடைக்க வேண்டிய விளைச்சல் 10 மூட்டையாக குறைந்துள்ளது. இந்த விளைச்சலையும் அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. கடந்த வாரம் திறந்து விட வேண்டிய சுற்று தண்ணீர் இன்னும் கிளை வாய்க் காலில் திறக்கப்பட வில்லை, என்றனர்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது