பிஏபி பாசன விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க கோரிக்கை
12:23 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
பிஏபி. முதல் மண்டல பாசனத்தில் நஷ்டமடைந்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், உடுமலை பாலாஜி திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஜோத்தம்பட்டி பாசன சபை தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மருள்பட்டி பாசன சபை தலைவர் பாலதண்டபாணி, நரசிங்காபுரம் பாசன சபைத் தலைவர் பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஜன. 22-ம் தேதி முதல் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் விடப்பட்டது. இந்த தண்ணீரை நம்பி உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், காங்கயம், திருப்பூர் வட்டங்களில் உள்ள விவசாயிகள் மக்காச்சோளம், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்தனர். கடந்த மூன்று மாதங்களில் ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை செலவுகளும் செய்துள்ளனர்.
இந்நிலையில் பிஏபி நிர்வாகம் பொறுப்பற்ற முறையில் நீர் நிர்வாகம் செய்து வந்ததாலும், காண்டூர் கால்வாய் உடைந்து திருமூர்த்தி அணைக்கு உரிய நேரத்தில் தண்ணீர் வந்து சேராததாலும், பாசனப் பகுதிகளில் உள்ள பயிர்கள் காய்ந்து வருகின்றன. இதனால் ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு தமிழக அரசு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனைமலை நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
காண்டூர் கால்வாயை சீரமைக்க தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதியில் முறைகேடு இன்றி பணிகள் நடைபெற விவசாய சங்க தலைவர்கள், பாசன சங்க தலைவர்கள் அடங்கிய குழுக்களை அமைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப். 12-ம் தேதி காலை 10 மணிக்கு உடுமலை பிஏபி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.மதுசூதனன், கிளுவங்காட்டூர் பாசன சபை தலைவர் ராஜசேகர், கண்ணம நாயக்கனூர் பாசன சபை தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட 200-க்கு மேற்பட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது