சின்னவெங்காயம் இருப்பு வைப்பு
10:41 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
கர்நாடகாவில் இருந்து வெங்காயம் வரத்து குறைவதால், கூடுதல் விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், உடுமலையில் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் இருப்பு வைத்து வருகின்றனர்.
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் சின்ன வெங்காயம் பயிரிடப் பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. கடந்த சீசனில் பல்வேறு காரணங்களால் விளைச்சல் குறைந்து, விலையும் சரிந்தது. இதனால், வசாயிகள் கவலை அடைந்திருந்தனர். கடந்த சில நாட்களாக, கர்நாடகா வில் இருந்து சந்தைக்கு வரத்து குறைந்து வருகிறது. இதனால், உள்ளூர் சந்தைகளில் சின்ன வெங்காயம் விற்பனை விலை, 12 ரூபாயில் இருந்து 14 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெளிமாநில வரத்து குறைந்துள்ளதால், விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அறுவடை செய்த வெங்காயத்தை விவசாயிகள் இருப்பு வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். விளைநிலங்களில் பட்டறை அமைத்து வெங்காயம் இருப்பு வைப்பது அதிகரித்துள்ளது.
பெதப்பம்பட்டி பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஆட்கள் பற்றாக்குறையால் சின்ன வெங்காய சாகுபடி செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது. வீரிய ரக வெங்காயத்தை அதிக நாட்கள் இருப்பு வைக்க முடியாது. அறுவடை சமயத்தில் விலை வீழ்ச்சி ஏற்பட்டாலும், உடனடியாக விற்பனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். வெளிமாநில வரத்து குறைந்துள்ளதால், வியாபாரிகள் கொள்முதல் விலையை இரண்டு ரூபாய் வரை அதிகரித்துள்ளனர். விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், சின்ன வெங்காயத்தை இருப்பு வைத்து, விற்பனை செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறோம், என்றனர்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது