இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

தீவனப்பற்றாக்குறை; விற்பனையாகின்றன மாடுகள்

கோடை என்பதால், திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மாடுகளுக்கு தேவையான தீவனம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், மாடுகளை விவசாயிகள் விற்க ஆரம்பித் துள்ளனர்.



வாரந்தோறும் திங்கட்கிழமை, திருப்பூர் மாட்டுச்சந்தை கூடுகிறது; நேற்று, 1,200 மாடுகள், கன்றுகள் விற்பனைக்கு வந்திருந்தன. வெயில் காலம் என்பதால் மேய்ச்சலுக்கு வாங் கும் அளவு குறைந்திருந்தது; இறைச் சிக்காகவே அதிகமாக வாங்கப்படுகின்றன. வரும் வாரங்களில் விற்பனைக்கு அதிகமான மாடுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: திருப்பூர் மாட்டுச்சந்தையில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் விற்பனை ஆரம்பமாகிறது. சந்தைக்கு 1,000 முதல் 1200 வரை, மாடுகள், கன்றுகள், எருமைகள் விற் பனைக்கு வருகின்றன. கேரளா மற்றும் ஊட்டி பகுதிகளுக்கு, இறைச் சிக்காகவே அதிகளவில் மாடுகளை வாங்குகின்றனர். கன்றுகள், 4,000 ரூபாய் வரையிலும், மாடுகள் 37 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையாகின்றன. வெயில் காலம் என்பதால் மாடுகளுக்கு தேவையான தீவனம் மற்றும் தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்பட் டுள்ளது. மேய்ச்சலுக்கு வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது; நன்றாக மழை பொழிந்தால் மட்டுமே, மேய்ச்சலுக்கு வாங்கும் விகிதம் அதிகரிக்கும். வரும் வாரங்களில் இருந்து விற்பனைக்கு வரும் மாடுகள் அதிகளவில் இருக்கும். கோடையை சமாளிக்க, மாடுகளை வைத்துவிட்டு, கன்றுகளை விற்போர் எண்ணிக்கை உயரும் வாய்ப்புள்ளது. இவ்வாறு, வியாபாரிகள் தெரிவித்தனர்.


குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment