இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

ஸ்ரீவில்லிபுத்தூரில் கரும்பு உற்பத்தி...குறைவு : வெல்லம் விலை உயர்வு


ஸ்ரீவில்லிபுத்தூரில் வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால், உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு, வெல்லம் விலை கிலோ 26லிருந்து 29 ரூபாயாக உயர்ந்து உள்ளது. இப்பகுதியில் வறட்சியிலும், தண்ணீர் வற்றாத சில கிணறுகளை நம்பி, விவசாயிகள் கரும்பு பயிரிட்டனர். கடந்த மாதம் வரை வெல்லம் விலை எதிர்பார்த்த அளவு உயராததால், கரும்பு விவசாயிகள் வேதனை அடைந்திருந்தனர். தற்போது கிராமங்களில் கோயில் விழாக்கள் நடப்பதால் வெல்லம் உற்பத்தி செய்வதற்கு, ஆள் கிடைக்காமல் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த மாதம் வரை, கிலோ 26 ரூபாய் வரை விற்கப்பட்ட வெல்லம், தற்போது 29 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து விவசாயி மூக்கையா கூறியதாவது: கோயில் விழாக்களால் வேலையாட்கள் வரவில்லை. வெல்லம் ஆலைகளை இயக்க முடியாமல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள், வெளியூர்களிலிருந்து வெல்லத்தை வாங்கி அதிக விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விழாக்கள் முடிந்த பின், விலை குறையும் வாய்ப்பும் மிகக் குறைவாகவே உள்ளது, என்றார்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment