தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் மலர்கள் சாகுபடிக்கு மானியம் தோட்டக்கலைத்துறை அறிவிப்பு
5:47 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் மலர்கள் சாகுபடிக்கு தோட்டக்கலைத்துறை மானியம் வழங்குகிறது. மலர்கள் சாகுபடியை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.
கம்பம் பகுதியில் சமீபத்தில் மல்லிகை, சம்பங்கி, செவந்தி உள்ளிட்ட பலவகை மலர்கள் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. கம்பத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட பூ மார்க்கெட்டால், இங்கிருந்து கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் பெரிய நகரங்களுக்கு அதிக அளவில் பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மலர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகை திட்டங்களை தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
தோட்டக்கலைத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மலர்கள் சாகுபடி செய்யும் ஒரு விவசாயி அதிகபட்சமாக 4 எக்டர் வரை மானியம் பெறலாம். ஒரு எக்டருக்கு 12 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை இடுபொருள்கள் மானியமாக வழங்கப்படுகிறது. சமீபத்தில் பெறப்பட்ட நிலத்தின் சிட்டா, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் கொடுத்து மானியம் பெற்று கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது